
ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத எல்அண்ட்டி முன்னாள் தலைவருக்கு 19 கோடி ரூபாய்..! உழைப்புக்கு மதிப்பு கொடுத்த நிறுவனம்..!
ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத எல்அண்ட்டி முன்னாள் தலைவர் அனில் மணிபாய் நாயக் அவர்களுக்கு, அவரது நேர்த்தியான உழைப்பை பாராட்டி19 கோடி ரூபாயை வழங்கி கௌரவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த அனில் மணிபாய் நாயக் 1965 ஆம் ஆண்டு, இளநிலை பொறியாளராக அந்நிறுவனத்தில் சேர்ந்து பின்னர் படிப்படியாக உயர்ந்து, கடந்த 2003 ஆம் ஆண்டு நிறுவன தலைவராக பொறுப்பேற்றார்.
ஆரம்ப காலம் முதலே நிறுவனத்திற்காக அயராது உழைத்தவர் இவர். இவரது 52 ஆண்டுகால பணியில் இதுவரை ஒரு நாள் கூட இவர் விடுமுறை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிற்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அவரது நேர்த்தியை பாராட்டி எல்அண்ட்டி நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு பணிக்கொடையாக 55 கோடி ரூபாயும், ஓய்வூதியமாக ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதுமட்டுமன்றி பணிக்காலத்தில் அவர் எடுக்காத விடுமுறை நாட்களுக்கான ஊதியமாக 19 கோடியே 27 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டதாக எல்அண்ட்டி நிறுவன நிதிநிலை அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.