திருஷ்டி பட்டுவிட்டதென்று சுத்தி போடுவார்களே ஏன் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Feb 6, 2019, 8:14 PM IST
Highlights

மூன்று அல்லது ஐந்து மிளகாய் வற்றலை ஊசியில் கோர்த்து அதன் நுனியில் ஒரு வெள்ளை காட்டன் துணியை சுற்றி நல்லெண்ணெயில் தோய்த்து பற்ற வைப்பார்கள்.

திருஷ்டி பட்டுவிட்டதென்று சுத்தி போடுவார்களே ஏன் தெரியுமா..? 

மூன்று அல்லது ஐந்து மிளகாய் வற்றலை ஊசியில் கோர்த்து அதன் நுனியில் ஒரு வெள்ளை காட்டன் துணியை சுற்றி நல்லெண்ணெயில் தோய்த்து பற்ற வைப்பார்கள். அதை பார்க்கும் வண்ணம் இடம் வலமாக சுற்றுவார்கள் எதையாவது கண்டு அல்லது கனவு கண்டு அதே நினைவில் சொல்லத்தெரியாது அழும் குழந்தை இந்த புதிய ஒளியை கண்டு அதிசயிக்கும்.

அப்போது ஆழ்மனதில் படிந்த பய உணர்வு மெல்ல மெல்ல குறைந்து,  இந்த வெளிச்சம் மட்டுமே மனதில் நிறையும். அத்துடன் எண்ணெய் கலந்த புகையை சுவாசித்தால் சுவாசம் சீரடையும். நெஞ்சில் உள்ள இருமல், தும்மல் குறையும். குழந்தைகளுக்கு சிவப்பு வெள்ளை நிறங்கள் மட்டுமே இனங்காண முடியும். எனவே தான் இந்த ஏற்பாடு.

வளர்ந்த குழந்தைகளுக்கு உப்பு மிளகாய் சுற்றி போடுவார்கள் கண் கொட்டாங்குச்சியை நன்கு எரிய விட்டு அதில் உப்பு மிளகாயைப் போட்டு வாசலில் கொட்டுவது வழக்கம். கண் கொட்டாங்குச்சி மருத்துவ குணம் நிரம்பியது. இதனை கொண்டு சுத்தி போடும் போது உடம்பில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக வெளியேறிவிடும். மேலும் நம் உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் உண்டு அதற்கு ஆரோ என்று பெயர். இந்த ஒளிவட்டம் மற்றவர்களின் எதிர்மறை எண்ணங்களை உறிஞ்சும் போது நமது ஆற்றல் குறையும்.

நமது ஆற்றல் பலப்படுத்தி எதிரியின் ஆற்றலை குறைக்கவே இந்த ஏற்பாடு. எனவேதான் உப்பு மருத்துவ முறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்போ புரிகிறதா? எதற்காக நமக்கு சுத்தி போடுகிறாரகள் என்று... 

click me!