"கும்மாங் குத்து திருவிழா"..! ஒருவருக்கொருவர் தாக்கி ரத்தம் வரும் காட்சி..! அடப்பாவிகளா இப்படியுமா..!

By ezhil mozhiFirst Published Mar 12, 2020, 7:20 PM IST
Highlights

ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நிஜாமாபாத் மாவட்டம் ஹன்சா கிராமத்தில் உள்ள ஆஞ்சேநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 

"கும்மாங் குத்து திருவிழா"..!  ஒருவருக்கொருவர் தாக்கி ரத்தம் வரும் காட்சி..! அடப்பாவிகளா இப்படியுமா..! 

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அரசனாக வரும் வடிவேலு சாதி சண்டைகளுக்கு என தனது நாட்டில் தனி மைதானம் அமைத்துக் கொடுப்பார். நாதியற்ற ஜாதிக்கு அடைக்கலம் கொடுத்து, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளையும் கொடுத்து அதகளம் செய்திருப்பார். அதே பாணியில் தெலங்கானாவில் கும்மாங் குத்து திருவிழா ஒன்று வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நிஜாமாபாத் மாவட்டம் ஹன்சா கிராமத்தில் உள்ள ஆஞ்சேநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் அங்கு பல சாதியினர் ஒன்றாக கூடி இரு பிரிவினராக பிரிந்து தங்களது திறமையை காட்டி வருகின்றனர். என்ன பாஸ் ஏதாவது பொங்கல் பரிசு போட்டியா...? என்று நினைக்க வேண்டாம். இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கி கொள்வது தான் அந்த திருவிழாவின் ஐலைட்டே. அதுவும் வெறுங்கையால். 

இந்த கோட்டை தாண்டி நாங்களும் வரமாட்டொம், நீங்களும் வரக்கூடாது என்று இடையில் ஒரு கயிற்றை வைத்து இரு பிரிவினருக்கும் இடையே எல்லை வகுத்துவிடுகின்றனர். அதன் பின்னர் ஆரம்பிக்கிறது அந்த கும்மாங் குத்து திருவிழா. சும்மா கையாலையே பொள, பொள என எதிர் அணியினர் பொளந்து கட்டுகிறார்கள் .இதனால் பல பேருக்கு ரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கோங்க... 

அப்படியும் யாரும் ஹாஸ்பிட்டலுக்கு போவது இல்லை. ஆஞ்சநேயர் கோவில் அக்னி குண்ட சம்பலை எடுத்து காயம் பட்ட இடத்தில் வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி வெற்றி நடைபோடுகின்றனர். இப்படிப்பட்ட திருவிழாவிற்கு எப்படி போலீஸ் அனுமதி கொடுத்தது என பொங்காதீங்க. அடுத்து மேட்டரே அது தான். இந்த திருவழாவிற்கு போலீஸ் ஆண்டு தோறும் அனுமதி மறுத்து வருகிறது. ஆனாலும் தடையை மீறி நாலு ஊமை குத்தாவது குத்திட்டு தான் போவோம் என ஊர் மக்கள் ஒன்று கூடிவிடுகின்றனர். 

ஊருக்கு எந்த கெடுதலும் வந்துவிடாக்கூடாது என்ற மூடநம்பிக்கையோடு ஆண்டு தோறும் நடைபெற்ற கும்மாங் குத்து திருவிழாவில் இந்த ஆண்டு மட்டும் 100 பேரின் மண்டை பிளக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... ஊர் நல்லா இருக்கனும்னா... 100 மண்டை உடையறதுல தப்பு இல்ல பாஸ்...

click me!