
மீன் சாப்பிட்டால் 100 வருடம் வாழலாம்..! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்..!
மீன் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்,
சமீபத்தில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதாகவும் பெரும் விமர்சனம் கிளம்பியது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் பொருட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்வது என்பது வதந்தி; அதை யாரும் நம்ப வேண்டாம்; மதுரையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் மீன்களில் ரசாயனம் தடவி இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவித்து இருந்தார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.