அட கடவுளே... ஹரித்துவாரில் கும்பமேளாவில் பங்கேற்ற 3000 பக்தர்களுக்கு கொரோனா..!

Published : Apr 14, 2021, 04:57 PM ISTUpdated : Apr 14, 2021, 05:27 PM IST
அட கடவுளே... ஹரித்துவாரில் கும்பமேளாவில் பங்கேற்ற 3000 பக்தர்களுக்கு கொரோனா..!

சுருக்கம்

ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 100 பக்தர்களுக்கும், 20 பார்வையாளர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 100 பக்தர்களுக்கும், 20 பார்வையாளர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கடந்த 9ம் தேதி தொடங்கி கும்பமேளா நடந்து வருகின்றது. நேற்று 2வது புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள், சாதுக்கள் என சுமார் 28 லட்சம் பேர் ஹரித்துவாரில் திரண்டு இருந்தனர். கும்பமேளாவுக்கு வருவோர், கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வருமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், அதனை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. பலரும் மாஸ்க் அணியாமல் சாலையில் உலா வருகின்றனர். சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் கங்கை நதியில் நீராடினர். புத்தாண்டு தினமான இன்று கங்கையில் புனித நீராட 6 லட்சம் பக்தர்கள் ஹரித்துவாரில் திரண்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 100 பக்தர்களுக்கும், 20 பார்வையாளர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,800ஐ தாண்டியுள்ளது. இதனால் விழாவில் கலந்து கொண்ட மேலும் பலருக்கு தொற்று பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும், முகக்கவசம் அணியாததாலும் பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்