காட்டுப்பகுதியில் "கட்டிங்"..! அலறும் கிருஷ்ணகிரி மக்கள்!

By ezhil mozhiFirst Published Apr 8, 2020, 1:06 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. தமிழகத்தில் இந்த கோரோனா தொற்றால் இதுவரை 700 கும் கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

காட்டுப்பகுதியில் "கட்டிங்"..! அலறும் கிருஷ்ணகிரி மக்கள்!

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. தமிழகத்தில் இந்த கோரோனா தொற்றால் இதுவரை 700 கும் கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அவரவர் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் சமூக விலகல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்றளவும் எதையும் பொருட்படுத்தாமல் ஒரு சிலர் வெளியில் திரிவதை பார்க்க முடிகிறது. இவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்புகின்றனர் போலீசார்.மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒரு நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை என்ற இப்பகுதிக்கு அருகே உள்ள ஓர்  காட்டுப்பகுதியில் ஆண்கள் அவர்களுடைய குழந்தைகளையும் அழைத்து வந்து முடி திருத்தம் செய்து கொள்கின்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஒருவர் பின் ஒன்றாக அதிக நபர் காட்டுப்பகுதிக்கு சென்று முடி திருத்தம் செய்து கொள்வதால் இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அவ்வாறு செல்ல கூடிய நபர்கள் முகக்கவசம் கூட அணிவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அப்பகுதியில் ஒருசிலருக்கு கொரோனா அறிகுறி தெரிவதால், மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

click me!