பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாய் பெனடிக்ட்டும் உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த ஹாலிவுட் நட்சத்திரங்களின் பெயர் பட்டியல்! அதிர்ச்சியில் நடிகர் - நடிகைகள்!
உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து ஒரு வழி செய்து வருகிறது. அந்த வகையில் சாதாரண மக்கள் முதல் நடிகை நடிகர்கள்,அரசியல் வாதிகள் என பலரும் கொரோனாவால் பெரும் பாதிப்புக்குளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்க கூட இடமில்லாமல் திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ,இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் பிளம், இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா மற்றும் அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி உள்ளிட்டோர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஒரு நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாய் பெனடிக்ட்டும் உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவருடைய இறுதி சடங்கிற்கு கூட யாரும்செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஜேம்ஸ் கேமரூன் படமான ஏலியன்ஸ், த ஒயிட் நைட், த அபோகலிப்ஸ் கோட் உள்பட பல படங்களில் நடித்த இவருக்கு வயது 68.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடன், கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்த இவரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஒரு நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.