உலக சுகாதார நிறுவனத்திற்கு "ஷாக்கிங்" நியூஸ் கொடுத்த டிரம்ப்! இக்கட்டான சூழ்நிலையிலும் அதிரடி அறிவிப்பு !

By ezhil mozhiFirst Published Apr 8, 2020, 11:34 AM IST
Highlights

உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதி கிடையாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டு உள்ள சம்பவம் உலக நாடுகளை உற்று கவனிக்க வைத்து உள்ளது 

உலக சுகாதார நிறுவனத்திற்கு "ஷாக்கிங்" நியூஸ் கொடுத்த டிரம்ப்! இக்கட்டான சூழ்நிலையிலும் அதிரடி அறிவிப்பு !

உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 82 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,005 ஆக அதிகரிப்பு.209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்வு.உலகளவில் கொரோனாவிலிருந்து 3,01,828 பேர் குணமடைந்தனர்.

இந்த ஒரு நிலையில், அமெரிக்காவில் மட்டும் கொரோனா உயிரிழப்பு 12ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 1,942 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த ஒரு நிலையில் உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதி கிடையாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டு உள்ள சம்பவம் உலக நாடுகளை உற்று கவனிக்க வைத்து உள்ளது 

அதன் படி, அதிக நிதி வழங்கினாலும் உலக சுகாதார நிறுவனம் பல விவகாரங்களில் அமெரிக்காவுடன் முரண்டுபட்டு இருந்துள்ளது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவது போல் தோன்றுகிறது எனவும் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சீனா மற்றும் இத்தாலியில் கட்டுக்கடங்காத உயிரிழப்பு ஏற்பட்டதை போன்றே தற்போது, அமெரிக்காவிலும் ஏற்பட்டு வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் குறித்து டிரம்ப் தெரிவிக்கும் போது சீனா வைரஸ் "என பெயரிட்டே பேசினார். மேலும் கொரோனா குறித்த பாதிப்பை விவரமாக எடுத்துரைக்க சீனா  தவற விட்டது. இன்று உலக நாடுகள் இவ்வளவு சிரமம் அனுபவிப்பதற்கு சீனாதான் காரணம் என தெரிவித்து  இருந்தார். மேலும் சீனாவில் உயிரிழப்புகள்  அதிகமாக நடந்துள்ளது. ஆனால் சீன அரசு அதனை மறைக்கிறது என  பகீரங்கமாகவே சாட்டி இருந்தார் டிரம்ப்.

இந்த ஒரு நிலையில் தான் அதிக நிதி வழங்கினாலும் உலக சுகாதார நிறுவனம் பல விவகாரங்களில் அமெரிக்காவுடன் முரண்டுபட்டு இருந்துள்ளது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவது போல் தோன்றுகிறது. எனவே உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். 

click me!