கொரோனா தொற்று உள்ளவர் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரப்ப முடியுமாம்.!! உலக சுகாதாரம் எச்சரிக்கை.!!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 12:06 AM IST
Highlights

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும் என்று மத்திய அரசு தெரிருப்பது மத்திய அரசுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

T.Balamurukan
கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும் என்று மத்திய அரசு தெரிருப்பது மத்திய அரசுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 14ம் தேதி முடிவடையும்.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்  இல்லாவிட்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி "லா அகர்வால்" செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்..,

"கொரோனா வைரஸ் அறிகுறிகள் லேசாகவோ அல்லது மிக லேசாகவோ இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தேவையில்லை. கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிந்தால் 30 நாட்களில் 406 பேருக்கு வைரஸை பரப்ப முடியும் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 124 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

நேற்று மட்டும் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,  இன்று 508 ஆக குறைந்துள்ளது.சற்று ஆறுதலாகவே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

click me!