தொழிறசாலைகள் திறக்க முதல் நாள் உத்தரவு, அடுத்தாக ரத்து.!! தொழிலாளர்கள் குடும்பங்கள் ரத்தக் கண்ணீர்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 7, 2020, 11:14 PM IST
Highlights

ஆலைகளை அத்தியாவசிய பணிகள் பட்டியலில் சேர்த்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில்,தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வாபஸ் பெறப்படுகிறது என தமிழக அரசு திடீரென உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதனால் தொழிலாளர்கள் ரெம்பவே அப்செட்டாகி இருக்கிறார்கள்.

T.Balamurukan

குறைவான தொழிலாளர்களை கொண்டு ஆலைகளை இயக்கலாம் எனவும் இந்த ஆலைகளை அத்தியாவசிய பணிகள் பட்டியலில் சேர்த்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில்,தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வாபஸ் பெறப்படுகிறது என தமிழக அரசு திடீரென உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதனால் தொழிலாளர்கள் ரெம்பவே அப்செட்டாகி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது.எனவே கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒவ்வொரு நாளும் புதுபுது சட்டங்களை போட்டு வருகின்றது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது.  தமிழகத்திலும் ஊரடங்கு ஏப்ரல்14ம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினந்தொறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 13 வகையான தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.  இதன்படி, இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, சர்க்கரை, உருக்கு ,சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலைகள், கண்ணாடி, தோல் பதனிடுதல், பேப்பர், டயர் ஆகிய தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. குறைவான தொழிலாளர்களை கொண்டு ஆலைகளை இயக்கலாம் எனவும் இந்த ஆலைகளை அத்தியாவசிய பணிகள் பட்டியலில் சேர்த்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில்,தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வாபஸ் பெறப்படுகிறது என தமிழக அரசு திடீரென உத்தரவு பிறப்பித்து உள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கை  தமிழக அரசு நீட்டிப்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறது.ஆனால் கையில் இருந்த காசு பணம் எல்லாம் காலியாகிருச்சு,இனிமேல் நாங்கள் எப்படி குடும்பம் நடத்துறதுனு தெரியல.இப்படியே போனால் பட்டினி சாவு வந்துருமோ, எங்க பொன்டாட்டி பிள்ளைகளை காப்பாத்த முடியாமல் போயிருமோனு பயமா இருக்கு என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
 

click me!