கொரோனா பயத்தால் பெற்ற தாய்க்கு "இறுதி சடங்கு" செய்ய மறுத்த மகன்..! மனவேதனை சம்பவம்..!

By ezhil mozhiFirst Published Apr 7, 2020, 8:21 PM IST
Highlights

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது. அதில் 382 பேர் குணமடைந்து உள்ளனர் 133 பேர் பலியாகி உள்ளனர் .

கொரோனா பயத்தால் பெற்ற தாய்க்கு "இறுதி சடங்கு" செய்ய மறுத்த மகன்..!  மனவேதனை சம்பவம்..! 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை தகனம் செய்ய அதிலும் குறிப்பாக பயத்தால் மறுத்துவிட்ட  மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் 202 நாடுகளுக்கும் மேலாக பெரும் பாதிப்பு அடைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக சீனாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும்,ஸ்பெயின், இத்தாலி பெல்ஜியம்,அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகளில் தின்தோறும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஒரு நிலையில் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது. அதில் 382 பேர் குணமடைந்து உள்ளனர் 133 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த ஒரு நிலையில் மிகவும் அதிர்ச்சி அடையும் விதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை  தகனம் செய்ய பயத்தால் மகன் மறுத்துவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபில், 69 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் கொரோனா தொற்று தனக்கும் ஏற்படும் என்ற பயத்தில் பெற்ற மகனே தன் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய மறுத்து உள்ளார். அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து விவரித்தும் கூட அவருக்கு பயம் குறையவில்லை. எனவே தன் தாய்க்கு இறுதி சடங்கை செய்ய மறுத்துள்ளார். இந்த நிகழ்வு  அனைவரிடத்திலும் பேசும் நிகழ்வாக மாறி உள்ளது.  
 

click me!