
T.Balamurukan
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். இவரைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 8 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பேசும் போது..,
'கொரோனா பாதித்தவருக்கு வயது 45. வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இறந்த நபருக்கு வெளிநாட்டு தொடர்புகள் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் இறந்த நபரின் உடல் கொரோனா வழிமுறைகளின் படி எரியூட்டப்படும்' என தெரிவித்தார்.
இதையடுத்து உயிரிழந்தவர் வசித்த வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு தொடர்பு இல்லாத நபருக்கு தொற்று ஏற்பட்டு இறந்ததால் எங்கே சமூக பரவல் தொடங்க ஆரம்பித்து விட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.