Kitchen hacks: உங்கள் சமையலறை நீங்கள் கையாள ஈஸியான 8 வழிமுறைகள்..! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

By Anu KanFirst Published Feb 20, 2022, 12:22 PM IST
Highlights

உங்கள் சமையலறை பகுதியை சுத்தமாகவும், அதில் இருக்கும் பொருட்களையும் எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

சமையல் அறைதான் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். மற்ற இடங்களை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். ஆனால், சமையல் அறையை சுத்தம் செய்வது, ஒவ்வொரு நாளும் கடினமான ஒன்றாகும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும். எனவே, உங்கள் சமையலறை சுத்தமாகவும், அதில் இருக்கும் பொருட்களையும் எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் சமையலறை கையாள எளிமையான வழிமுறைகள்... 

வினிகர் கலந்து செல்ஃப்களை துடைப்பது:

சமையலறையில் இருக்கும் செல்ஃப்களில் அடிக்கடி எறும்பு தொல்லை வருகிறது என்றால் கொஞ்சம் தண்ணீரில் வினிகர் கலந்து செல்ஃப்களை துடைத்து உலர விட்டு பின்னர் டப்பாக்களை அடுக்கி வையுங்கள், ஒரு எறும்பு கூட அந்த பக்கம் வராது.

எலக்ட்ரானிக் சமையல் உபயோக பொருட்கள்:

உங்களிடமிருக்கும் எலக்ட்ரானிக் சமையல் உபயோக பொருட்களான மிக்ஸி, மைக்ரோ ஓவன், ஃப்ரிட்ஜ் போன்றவை சுத்தமாக இருக்க அதிகம் மெனக்கெடாமல் கொஞ்சம் தண்ணீரில் பற்பசையை சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பஞ்சை கொண்டு நனைத்து நன்கு பிழிந்து துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீரில் துடைத்து உலர விட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

கேஸ் அடுப்பு:

சாப்பாடு தயாரித்தவுடன், சமையல் அறையை மட்டுமல்ல, ஒவ்வொரு உணவையும் தயாரித்த பிறகு கேஸ் அடுப்பையும் சுத்தம் செய்வது நல்லது. மற்றொரு முக்கியமான அம்சம் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறது.

சிம்னி:

அடுத்ததாக சமையல் அறையில் அவசியமாக இருக்க வேண்டியது ‘சிம்னி’. அடுப்பிற்கு ஏற்றவாறு சரியான சிம்னியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது புகை வெளியே போவதற்கு மட்டுமல்லாமல், சமைக்கும்போது வெளியாகும் எண்ணெய் பிசுக்கு சுவரில் படிவதையும் தடுக்கும்.

பிரிட்ஜ்:

பிரிட்ஜ் முழுவதும் கெட்ட பாக்டீரியாக்கள் உலவும் எனவே எந்த ஒரு உணவு பொருளையும் திறந்த நிலையில் வைக்கக் கூடாது. பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு எனவே ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி மூலைக்கு ஒன்றாக வைத்து விடுங்கள். வெங்காய வாடை அடிக்காமல் இருக்க, ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதே போல் அதன் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 பூச்சி, புழுக்கள் வராமல் தடுக்க:

ரவை, மைதா போன்ற பொருட்களில் பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வையுங்கள். அதே போல பயறு வகைகளை லேசாக வறுத்து பின்னர் டப்பாக்களில் அடைத்து வைத்தால் பூச்சிகள் வராமல் இருக்கும்.

ஈரமில்லாமல் வெளிச்சமாக வைத்துக் கொள்ளுங்கள்:

சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்திருக்க வேண்டும். இதனால் கரப்பான் பூச்சிகள் தொல்லை இல்லாமல் இருக்கும். சமையல் அறை இருட்டாக, ஈரப்பதத்துடன் வைத்திருந்தால் புழுக்களும், வண்டுகளும், பூச்சிகளும் படை எடுக்க ஆரம்பிக்கும் எனவே ஈரமில்லாமல் வெளிச்சமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

click me!