Priyanka VS Trisha: 96 ஜானுவாக மாறிய விஜய் டிவி பிரியங்கா! எடையை குறைத்து ஒல்லியானதால் இந்த மாற்றமா..?

Anija Kannan   | Asianet News
Published : Feb 20, 2022, 11:36 AM ISTUpdated : Feb 20, 2022, 01:01 PM IST
Priyanka VS Trisha: 96 ஜானுவாக மாறிய விஜய் டிவி பிரியங்கா! எடையை குறைத்து ஒல்லியானதால் இந்த மாற்றமா..?

சுருக்கம்

Priyanka VS Trisha: பிரியங்கா தேஷ்பாண்டே, 96 பட ஜானு போன்ற கெட்டப்பில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரபல தொகுப்பாளினியான வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு தமிழகத்தில் பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சினிமா பிரபலங்களை விட, சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றே கூறலாம். அந்த வகையில், விஜய் டிவி தொகுப்பாளினிகளில் டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய காமெடியான பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா.சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரியங்கா, நூலிழையில் டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை தவறவிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து ரன்னராக வெளியேறினார். இருப்பினும் அந்நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கிய போட்டியாளர் இவர்தான். இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா, கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரவீன்  உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சமயத்தில், அதே ஷோவை தொகுத்து வழங்கிய பிரியங்கா, அவர் மீது காதல் வயப்பட்டார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் பிரியங்கா தனது கணவர் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசாதது பேசு பொருளாக இருந்தது. இதையடுத்து, வெளியே வந்த பிரியங்கா அதற்கான விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது பிரியங்கா அவரின் ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாக மாபெரும் வெற்றி கண்ட, 96 பட ஜானு போன்ற கெட்டப்பில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் ஒரிஜினல் ஜானுவான நடிகை திரிஷாவும் பிரியங்காவின் புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக் கமெண்ட் செய்துள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்