ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்... லாட்டரியில் லக் அடித்ததால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

By SG BalanFirst Published Mar 28, 2024, 8:48 PM IST
Highlights

முதல் பரிசு SC308797 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்குக் கிடைத்துள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டை கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாசீர் என்பவர் மார்ச் 19ஆம் தேதி வாங்கியுள்ளார். அதாவது குலுக்கல் நடைபெறுவதற்கு சில மணிநேரம் முன்பு வாங்கி டிக்கெட் தான் நசீரை அதிர்ஷ்டசாலியாக மாற்றிவிட்டது.

கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் புதன்கிழமை நடைபெற்றது. முதல் பரிசாக ரூ.10 கோடியும் இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதல் பரிசை கண்ணூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தட்டிச் சென்றுள்ளார்.

இந்த ஆண்டு சம்மர் குலுக்கலுக்கான லாட்டரி விற்பனை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. முதல் பரிசுக்கான டிக்கெட் ரூ.250 க்கு விற்கப்பட்டது. 36 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் 33.6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின.

இந்நிலையில், முதல் பரிசு SC 308797 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்குக் கிடைத்துள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டை கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாசர் என்பவர் மார்ச் 19ஆம் தேதி வாங்கியுள்ளார். அதாவது குலுக்கல் நடைபெறுவதற்கு சில மணிநேரம் முன்பு வாங்கி டிக்கெட் தான் நசீரை அதிர்ஷ்டசாலியாக மாற்றிவிட்டது.

கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!

நமக்கெல்லாம் எங்கே லாட்டரியில் பரிசு கிடைக்கும் என்ற அவநம்பிக்கையில் இருந்த தனக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்ற அறிவிப்பை உடனடியாக நம்பமுடியவில்லை என்று சொல்கிறார் நாசர். "என்னுடைய டிக்கெட் எண்ணை அறிவித்ததும் ஒரு நிமிடம் தலைசுற்றவே வந்துவிட்டது" என்று அவர் கூறினார்.

இவருக்கு அடுத்து அதிர்ஷ்டம் அதிகமாக இருந்தது SA 177547 என்ற டிக்கெட்டை வாங்கியவருக்குத்தான். இரண்டாவது பரிசுத்தொகை ரூ. 50 லட்சம் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் கேரளா, அசாம், சிக்கிம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்படை நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு முதல் லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம்.

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக கூடுதலாக உழைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு இ.பி.எஸ். அட்வைஸ்

click me!