சாக்லேட் சாப்பிட்ட பிறகு உடலுறவு கொண்டால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது தெரியுமா..?
பெரும்பாலானோர் சாக்லேட் விரும்பு சாப்பிடுவார்கள். அதுவும் பெண்களுக்கு சாக்லேட் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதுவும் சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் கேக் என சாக்லேட்டால் செய்யப்பட்ட எதையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. அந்தவகையில், சில ஆய்வுகள் சாக்லேட்டுக்கும் பாலினத்திற்கும் இடையே ஒரு நேர்மறையான உறவை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
டார்க் சாக்லேட், சாப்பிட்டால் எந்தவொரு நபரிடமும் அன்பின் உணர்வைத் தூண்டும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகிறது. மேலும், சாக்லேட்டில் ஃபைனிலெதிலமைன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது காதல் இரசாயனம் என்றும் அழைக்கப்படுகிறது.
சாக்லேட் பெண்களுக்கு நன்மை:
சாக்லேட் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் உடலுறவுக்கு முன் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் சாக்லேட் சாப்பிட்ட பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். அதுவும் குறிப்பாக அவர்கள் டார்க் சாக்லேட் தான் சாப்பிட வேண்டும். இதனால் அவர்கள் சிறந்த உச்சக்கட்டத்தை அடைய முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
நல்ல மனநிலைக்கு உதவுகிறது:
பெண்கள் தங்கள் மனநிலையை மேம்படுத்த சாக்லேட் உதவுகிறது. பொதுவாக, பெரும்பாலான ஆண்கள் தங்கள் துணையை ஈர்க்க சாக்லேட்களை வாங்கி கொடுப்பார்கள். காரணம், பெண்கள் சாக்லேட் சாப்பிடும் போது உற்சாகமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் சாக்லேட் தினமும் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனென்றால், அதிக காஃபின் ஆரோக்கியத்திற்கு கேடு. மேலும் இது நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கிறது. அதனால் தான் சாக்லேட் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால், வாரம் ஒருமுறை சாக்லேட் சாப்பிடலாம்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சாக்லேட்டில் உள்ள கோகோ, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மேலும், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருப்போம். உடலுறவுக்குக் கூட, நல்ல ரத்த ஓட்டம் மிகவும் அவசியம். இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், உடலுறவில் நன்றாக ஈடுபடலாம். அதனால் தான் உடலுறவுக்கு முன் சாக்லேட் சாப்பிடுவது நல்லது.
பாலுணர்வை அதிகரிக்கும்:
சாக்லேட், டோபமைன் போன்ற ஹார்மோன்களை உருவாக்க நம் உடலில் வேலை செய்யும். மேலும், உடலுறவுக்கு முன் ஆண்கள் சாக்லேட் சாப்பிட்டால், நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவார்கள். அதாவது சாக்லேட் ஆண்களின் பாலுணர்வை அதிகரிக்கும்.
பாலியல் ஆசையை அதிகரிக்கும்:
இன்றைய காலகட்டத்தில், அதிக டென்ஷன் வாழ்க்கை வாழ்வதால், உடலுறவில் இருந்து சீக்கிரம் விலகிவிடுகிறார்கள். இதனால் பாலியல் ஆசை குறையத் தொடங்குகிறது. டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அது உங்கள் செக்ஸ் டிரைவை அதிகரிக்கும் மற்றும் உடலில் டோபமைன் அளவு அதிகரிக்கும். பின்னர் நம் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, பாலியல் ஆசை அதிகரிக்கும்.