கேரளா 72000 ஆக்டிவ் கேஸ்... தமிழ்நாடு 42 ஆயிரம்... எதிர்க்கட்சிகள் மேடைக்கு வரவும்..!

Published : Oct 02, 2020, 05:36 PM IST
கேரளா 72000 ஆக்டிவ் கேஸ்... தமிழ்நாடு 42 ஆயிரம்... எதிர்க்கட்சிகள் மேடைக்கு வரவும்..!

சுருக்கம்

கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதால் அம்மாநில அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதால் அம்மாநில அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

கேரளாவில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் 75,385 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மாத இறுதியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,20,721 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிகையும் ஒரே மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாவது 8 சதவீதமாக உள்ள நிலையில், கேரளத்தில் 12.59 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உச்சபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. கேரளத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 41,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை முதன் முதலாக 5 ஆயிரத்தைக் கடந்தது. இதன் பின்னர் 6 ஆயிரத்தையும், தொடர்ந்து 7 ஆயிரத்தையும், இன்று 5 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. கேரளாவில் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்மாநில சுகாதாரத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் அக்டோபரில் ஊரடங்கு இல்லை என அறிவித்தார். ஆனால்,  கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதைத் தடைசெய்து, கேரள அரசு 144 தடை உத்தரவை மாநிலம் முழுவதற்கும் விதித்துள்ளது.

இந்த உத்தரவு அக்டோபர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும். வெறும் 13 நாட்களில், செப்டம்பர் 24 அன்று மாநிலத்தில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1.50 லட்சத்தைத் தொட்டது. மேலும் பரவலின் வேகம் மேலும் அதிகரித்து, சமூக விலகல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயாராகி வருகிறது. 

தற்போது, ​​கேரளாவில் 72,339 பேர் தொற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளின் தனிமை வார்டுகளில் 30,258 பேர் உட்பட 2.43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதாக பதிவாகி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 46,369 பேர் தொற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த மாதத்தை விட 11. 5 சதவிகிதம் குறைவு.

 

இந்தியாவில் கொரோனா பரவிய மே, ஜூன் மாதம் கேரளா முழுமையாக கொரோனாவை ஒழித்து விட்டதாக புகழ்ந்து எழுதிய இடதுசாரி பத்திரிகைகள் தற்போதைய அங்கிருக்கும் நிலை பற்றி வாய் திறக்கவில்லை.  கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா அரசை பார்த்து எடப்பாடி படிக்கவேண்டும் என முன்பு மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், தற்போது கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டையே கேரளா மிஞ்சி விட்டது. இப்போது என்ன சொல்வார் மு.க.ஸ்டாலின்..?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு
மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்