என்னடா புதுசு புதுசா பீதியை கிளப்புறீங்க.. கொரோனா பாதித்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு..!

By vinoth kumarFirst Published Sep 28, 2020, 5:29 PM IST
Highlights

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க இதய நிபுணர் எரிக் டோபோல், sciencemag.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில்;- கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் குணமாகி விட்டாலும் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

27 வயது நிரம்பிய நைஜீரிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஓஜோ அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். அவர் சமீபத்தில் கூடைப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  மைக்கேல் ஓஜோவின் திடீர் மரணம் குறித்து மருத்துவர்கள் குழு ஆராய்ந்த போது கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் சிலருக்கு ரத்தத்தின் அடர்த்தியும் உறையும் வேகமும் அதிகமாகவே நீடிப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்படும் போது நுரையீரல் மட்டுமின்றி இதயமும் ஒரு வகையில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளதாக ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

click me!