
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் மஞ்சள் சுடிதாரில் போட்ட குத்தாட்டம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் நடிப்பில், அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இதன் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைக்கிறார்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடலின் புரோமோ கடந்த மாதம் வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரின் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.
சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி உள்ளது.
இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.
பட்டி தொட்டி எங்கும் பரவிய அரபிக் குத்து பாடல் யூடியூபில், தற்போது வரை இந்த பாடல் 136 மில்லியன் பார்வைகளை கடந்து ஹிட் அடித்து வருகிறது.
வைரலாகி வரும் அரபிக் குத்து பாடலுக்கு, தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலரும் நடனமாடி தங்களது வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது அந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷும் இணைந்து இருக்கிறார். தற்போது, கீர்த்தி சுரேஷ் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் புதிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.