சிக்கன் வாங்குனா கறிவேப்பிலை வச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்டா இருக்கும்!

By Kalai SelviFirst Published Sep 14, 2024, 2:55 PM IST
Highlights

Curry Leaf Chicken Gravy Recipe : காரசாரமான சுவையில் கறிவேப்பிலை சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

நாளை சண்டே என்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு அசைவத்தில் ஏதாவது ஸ்பெஷலாக சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? ஆனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் சிக்கன் வாங்கினால், அதை எப்போதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான சுவையில் சமைத்துக் கொடுங்கள். 

உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக இருந்தால், சிக்கனையும் கறிவேப்பிலையும் கொண்டு சுவையான கறிவேப்பிலை சிக்கன் கிரேவி செய்து, என்ஜாய் பண்ணி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள், இந்த ரெசிபியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருப்பது மட்டுமின்றி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கறிவேப்பிலை சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  திருநெல்வேலி ஸ்டைலில் கோழிக்குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க...!

கறிவேப்பிலை சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்..

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி விதைகள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2

குழம்பு வைக்க தேவையான பொருட்கள்..

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுகியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1 
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  அசத்தலான சுவையில் கிரீன் சில்லி சிக்கன்.. இப்படி செஞ்சு அசத்துங்க..!

செய்முறை :

கறிவேப்பிலை சிக்கன் கிரேவி செய்ய முதலில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மசாலா அரைப்பதற்கு எடுத்து வைத்த பொருட்களில் கறிவேப்பிலையை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு நன்கு வறுக்கவும். அவற்றில் இருந்து நல்ல மணம் வந்தவுடன் அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் சில துளிகள் என்னை விட்டு அதில் எடுத்து வைத்த கருவேப்பிலையை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும் பிறகு அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் கழுவி வைத்த சிக்கனை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அடுத்து அதில் மஞ்சள் தூக், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். அதன் பிறகு அதில் நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி சுமார் மூன்று விசில் விட்டு இறக்கவும்.

பிறகு குக்கர் மூடியை திறந்து அதில் தயாரித்து வைத்த பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு குழம்பை சுமார் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்த வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கறிவேப்பிலை சிக்கன் கிரேவி தயார். இந்த சிக்கன் கிரேவியை நீங்கள் சூடான சாதம், நெய் சாதம், குஸ்கா ஆகியவற்றுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!