
இந்த நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக பலரும் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக, பெண்கள் சீரற்ற மாதவிடாய், அதிகமான உதிரபோக்கு, இரும்புச்சத்து குறைப்பாடு, எலும்புகள் பலவீனம் என பல உடல்நல உபாதைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட கருப்பு உளுந்தங்கஞ்சி உதவும். இந்த பதிவில் கருப்பு உளுந்தங்கஞ்சி தயாரிப்பது எப்படி? மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? என்று இங்கு பார்க்கலாம்.
கருப்பு உளுந்தங்கஞ்சி தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - 1 கிளாஸ்
புழுங்கல் அரிசி - அரை கிளாஸ்
வெந்தயம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
ஓமம் - 1 ஸ்பூன்
சுக்குத்தூள் - கால் ஸ்பூன்
நெய் - 5 ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் உழுந்தை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். புழுங்கல் அரிசியையும் அதுபோல பொடியாக்கவும். பிறகு வெந்தயம் மிளகு, சீரகம், ஓமன் ஆகியவற்றை லேசாக வறுத்து பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கொதித்ததும் பொடித்த பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். அதனுடன் உப்பு, சுக்கு, தேங்காய் துண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக நெய் சேர்க்கவும். அவ்வளவுதான் ஆரோக்கியம் மற்றும் ருசியான உளுந்தங்கஞ்சி ரெடி!
உளுந்தங்கஞ்சி சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள் :
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரின் ஆரோக்கியத்திற்கும் உளுந்து கஞ்சி நன்மை பயக்கும். மூட்டு வலி, முதுகு வலி, கை, கால் வலி, இடுப்பு வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உளுந்தங்கஞ்சி உதவுகிறது.
- வாரத்திற்கு ஒரு முறை பெண்கள் இதை கட்டாயம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் மாதவிடாய் சிரமத்தில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இது கர்ப்பப்பையை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
- இது தவிர உடல் எடையை அதிகரிக்கவும், சிறுநீரக சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யவும், எலும்புகளை பலப்படுத்தவும் உளுந்து கஞ்சி உதவுகிறது.
- கருப்பு உளுந்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.
- உளுந்தங்கஞ்சி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். மேலும் உளுந்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்கி இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.