தமிழ் பிரபலங்களை சுண்டி இழுக்கும் ''கச்சா பாதம்'' பாடல்... 'பாரதி கண்ணமா' ரோஷினியின் கலக்கல் டான்ஸ்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 13, 2022, 12:52 PM IST
தமிழ் பிரபலங்களை சுண்டி இழுக்கும் ''கச்சா பாதம்'' பாடல்... 'பாரதி கண்ணமா' ரோஷினியின் கலக்கல் டான்ஸ்..!!

சுருக்கம்

கச்சா பாதம் பாடலுக்கு  ''பாரதி கண்ணமா ரோஷினி'' நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கச்சா பாதம் பாடலுக்கு  ''பாரதி கண்ணமா ரோஷினி'' நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். 

வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் இந்த கச்சாபாதம் பாடலை அறிமுகம் செய்துவைத்துள்ளார். என்னது,  பாதாம் விற்கும் வியாபாரியா? என்று தானே யோசிக்கிறீங்க..ஆம், அவர் தனது பாதாமை விற்பதற்காக வித்தியாசமான பாட்டு பாடியுள்ளார்.

இதையடுத்து, அவர் பாடிய கச்சாபாதம் என்ற பாடல் இணையத்தில் மிகவும் வைரலாகியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங் வெளியாகி மாபெரும் வைரலானது. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான இந்த பாடலை கிட்டத்தட்ட நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே இந்த கச்சா பாதம் என்ற பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர். இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, ''பாரதி கண்ணமா சீரியலில் நடித்த ''ரோஷினி ஹரிப்ரியன்'' நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது, ரோஷினி தனது சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அவர் தற்போது கச்சா பாதம் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். 

 
இவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ''பாரதி கண்ணம்மா'' சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இதையடுத்து, சினிமா வாய்ப்புகள் கூடி வர சீரியலிருந்து ரோஷினி விளக்கினார். இதையடுத்து, கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, கண்ணம்மா ''குக் வித்'' கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலக்கி வருகிறார். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் சமையல் அம்மா, நிஜ குக்காக மாறிட்டாங்க என்று கமெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்