தென்னிந்திய நடிகர்களான, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜூன் மீது தான் வெறித்தனமான ரசிகையாக இருப்பதாக தீபிகா படுகோண் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர்களான, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜூன் மீது தான் வெறித்தனமான ரசிகையாக இருப்பதாக தீபிகா படுகோண் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தீபிகா தீபிகா படுகோண், நடித்திருக்கும் ஹெகரியான் திரைப்படம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இவருடன், சித்தான்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தைர்யா கர்வா, நசீருதீன் ஷா, ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஷகுன் பத்ரா இயக்கியுள்ள இந்த படத்தை, வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் அமேஸான் இணைந்து தயாரித்துள்ளது.
undefined
ஓடிடி-யில், வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் முத்த காட்சிகள் தொடர்பான சர்ச்சை இணையத்தில் வைரலாக பரவி வந்தன. இதற்கு தீபிகா படுகோண், இந்தியில் லிப்-லாக் காட்சிகள் சாதாரணம் என்று பதில் அளித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பத்திரிகையாளர்கள் அவரிடம், நீங்கள் யாருடன் அடுத்து படம் பண்ண விருப்பம் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு சற்றும் தயங்காமல், தீபிகா படுகோண் நான் ஜூனியர் என்.டி.ஆரின் வெறித்தனமான ரசிகை என்றார். மேலும், அல்லு அர்ஜுனுடன் படம் பண்ண ஆசையாக இருப்பாதகவும் தெரிவித்தார். இதனை, பார்த்த அவருடைய ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தற்போது, தென் இந்தியாவில் பரவலாக பேசப்படும் இரண்டு படங்கள், ஆர்ஆர்ஆர் திரைப்படம் மற்றும் அல்லு அர்ஜுன் நடப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட ''புஷ்பா'' திரைப்படம் ஆகும். பட்டி தொட்டி எங்கும் ''புஷ்பா'' திரைப்படத்தின் பாடல் வரிகளுக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ''டிக் டாக்'' செய்து அசத்தி வருகின்றனர்.
ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள 'RRR ' திரைப்படம், மார்ச் 25 ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி (Keera Vani) இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர், மேக்கிங் வீடியோ, மற்றும் நட்பு பாடல் என அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.