தொலைக்காட்சி தொடராக கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு..! இன்று முதல்..!

By ezhil mozhi  |  First Published Nov 2, 2019, 3:09 PM IST

கலைஞர் கருணாநிதி குறித்த வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. நெஞ்சுக்கு நீதி புத்தகங்கள் மட்டுமே ஆறு பாகங்களாக இதுவரை வெளியாகியுள்ளது.
 


கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு..! இன்று முதல் புது சீரியல் ..!

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதற்கு முன்னதாக கலைஞர் கருணாநிதி குறித்த வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. நெஞ்சுக்கு நீதி புத்தகங்கள் மட்டுமே ஆறு பாகங்களாக இதுவரை வெளியாகியுள்ளது.

அந்த புத்தகத்தில் கருணாநிதியின் குழந்தை பருவம் முதல் தனது அரசியல் பயணங்கள், சந்தித்த பிரச்சனைகள், முதல்வரானது உள்ளிட்ட அனைத்தும் விவரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதனை அப்படியே மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒன்று எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கும் நெஞ்சுக்கு நீதி என பெயரிடப்பட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாரம் தோறும் சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகிறது. 

click me!