முந்திக்கொண்டது சீனா..! 5 ஜி சேவையை அறிமுகப்படுத்தி அசத்தல் ..! 4 ஜி தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு பதிவிறக்க வேகம்...!

By ezhil mozhiFirst Published Nov 2, 2019, 2:21 PM IST
Highlights

தொடக்கத்தில் 50 நகரங்களில் மட்டும் இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டு, பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முந்திக்கொண்டது சீனா..! 5 ஜி சேவையை அறிமுகப்படுத்தி அசத்தல் ..! 4 ஜி தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு பதிவிறக்க வேகம்...!

ஒரு நொடிக்கு ஒரு ஜிபி என்ற வேகத்தில் செயல்படும் 5ஜி இணையசேவை  சீனா அறிமுகப்படுத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யூனிக்கோம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.

இந்த சேவையை பெற இந்திய மதிப்பில் 1,272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று அதிகபட்ச கட்டணமாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜிபி டேட்டா வழங்குகிறது 

தொடக்கத்தில் 50 நகரங்களில் மட்டும் இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டு, பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை பெற இப்போதே 1 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 ஜி சேவை அறிமுகத்திற்கு பிறகு ஹூவேய் மற்றும் ஸியோமி நிறுவனங்கள் செல்போன்கள் 5 ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களை தயாராகி விட்டன.  

இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள 4 ஜி LED தொழில்நுட்பத்தை விட100 மடங்கு பதிவிறக்க வேகம் 5 ஜி வில் இருக்கும். உலக அளவில் 5 ஜி சேவை 2020 இல் தான் முழுகி வீச்சில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே சீனா 5 G சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!