எந்த திசை நடந்தால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்..? அருமையான ஜோதிட கணிப்பு...!

By thenmozhi gFirst Published Aug 18, 2018, 6:04 PM IST
Highlights

ஜாதகப்படி நடப்பு திசா புத்தி நமக்கு எப்படி உள்ளது என்பதையும் எந்த திசையில் இருந்தால்,எப்படி  நடந்துக்கொள்ள வேண்டும் என்பதயும் பார்க்கலாம். 
 

எந்த திசை நடந்தால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்..? அருமையான ஜோதிட கணிப்பு...! 

ஜாதகப் படி நடப்பு திசா புத்தி நமக்கு எப்படி உள்ளது என்பாதையும் எந்த திசையில் இருந்தால் எந்த பலன் நமக்கு கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம். 

பொதுவாகவே நமக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் இல்லா விட்டாலும் வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வத்திற்கு சென்று வர வேண்டும், மற்றும் வேறு ஒரு கோவிலுக்கும் சென்று வருவது நல்லது. ஆக மொத்தத்தில் வருடத்திற்கு இரண்டு கோவில்களுக்கு செல்வது ஆக சிறந்ததாக பார்க்கப்படுகிறது.எப்போதுமே  குல தெய்வத்தை வணங்க செல்லும் போது, அமாவாசையன்று செல்வது நல்லது.

திசை மற்றும் நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் தெரியுமா ..? 

1.கேது திசை 

சித்தர்கள் வழிபாடு, தியானம் செய்வது, யாரையும் இழிவு படுத்தாமல் இருப்பது நல்லது 

2.சுக்கிர திசை 

மனைவியிடம் விட்டு கொடுத்து செல்வது, பெண்களை இழிவாக பேசாமல் இருப்பது மிகவும் நல்லது

3.சூரிய திசை

தந்தை சொல் கேட்டு மதித்து நடக்க வேண்டும். லஞ்சம் வாங்க கூடாது

4.சந்திர திசை

தாயை மதித்து நடக்க வேண்டும்..எப்போதும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 

5. சகோதரர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வீண் பிரச்சனைக்கு செல்ல கூடாத நேரம் இது.

6.ராகு திசை

பெண்கள் விஷயத்தில் மற்றும் போதை பொருளுக்கு அடிமையாக கூடாது. 

7.குரு திசை

பெரியவர்களை நன்கு மதித்து நடக்க வேண்டும், மற்றும் அவர்களுக்கு தேவையானதை செய்து தர வேண்டும். 

8.சனி திசை

மிகவும் முக்கியமான திசையான இதில், அனைவரிடத்திலும் மிகவும் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

9.புதன் திசை

படிப்பு, ஆராய்ச்சிக்கு, உதவி செய்வது. ஜோதிடர்களை திட்டாமல் இருப்பது. எப்போதும் அனைவரிடத்திலும் மரியாதையாக நடந்துக் கொள்வது ஆக சிறந்தது. 

click me!