பாதிக்குபாதி கொடுத்தாபோதும் !! ரிலையன்ஸ் ஜியோ தீபாவளித் தள்ளுபடி !! இந்த அளவுக்கு 4ஜி ஸ்மார்ட்போன் விலைகுறைவா !!

Published : Oct 01, 2019, 09:45 PM IST
பாதிக்குபாதி கொடுத்தாபோதும் !!  ரிலையன்ஸ் ஜியோ தீபாவளித் தள்ளுபடி !!  இந்த அளவுக்கு 4ஜி ஸ்மார்ட்போன் விலைகுறைவா !!

சுருக்கம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன் விலையை 53 சதவீதம் குறைத்து ரூ.699 என்று அதிரடி விலைக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டில் உள்ள 35 கோடி 2ஜி போன் பயனாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் ரூ.700 பெறுமான இலவச டேட்டாக்களையும் வழங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட செய்திக் குறிப்பில், “35 கோடி 2ஜி பயனாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு இரு குழப்பமான சூழல் இருந்து வருகிறது. டேட்டாக்களுக்கு சிலர் அதிகமான விலை கொடுக்கிறார்கள், மற்றவர்களோ டேட்டா இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். இதனால் இருவரும் சிரமங்களை மேற்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு இலவச வாய்ஸ் கால்கள் வசதியும் இல்லை, இண்டெர்நெட்டும் பயன்படுத்த முடியாது. ஆகவேதான் ஜியோ அனைத்து இந்தியர்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட் போன் தற்போதைய விலையான ரூ.1500லிருந்து ரூ.699ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 
பழைய போனை மாற்றாமலேயே ரூ.800 வரை சேமிக்கலாம். 4ஜிக்கு புதுப்பிப்பதற்கான இடையூறுகள் இதன் மூலம் களையப்பட்டுள்ளன. 4ஜிக்கு மாறும்போது ரூ.700 பெறுமான டேட்டா இலவசமாக வழங்கப்படும். 

இதன் படி ஒரு வாடிக்கையாளர் மேற்கொள்ளும் முதல் 7 ரீசார்ஜ்களின் போது ரூ.99 மதி்ப்புள்ள டேட்டாக்களை ரிலையன்ஸ் சேர்த்து வழங்கும். ஆகவே போன் விலையில் ரூ.800 சேமிப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.700 பெறுமான டேட்டாக்கள் கூடுதலாகக் கிடைக்கின்றன. எனவே ஒவ்வொரு ஜியோ போனிற்கும் ரூ.1500 பெறுமான கூடுதல் பயன் கிடைக்கிறது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது “ரிலையன்ஸ் ஜியோபோன் தீபாவளி 2019” என்று அழைக்கப்படுகிறது. இது தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் நடைமுறையில் இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Star Fruit Benefits : இந்த ஸ்டார் பழத்தை பாத்தா உடனே வாங்கி சாப்பிடுங்க... கோடி நன்மைகள் கிடைக்கும்
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!