
இருசடங்கில் "குழந்தை உடல் அசைவு:...! மீண்டும் மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற சம்பவம் ..!
இறுதி சடங்கின் போது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அடுத்து உள்ளது வயலூர்.இங்கு வசித்து வரும் பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி ப்ரீத்திக்கு கெவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. ஒரு வார காலமாக கெவினுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. பின்னர் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதை அடுத்து இறுதி சடங்கு செய்வதற்காக ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் உடல் அசைந்து உள்ளது. இதனை கண்டு ஆச்சரியமடைந்த பெற்றோர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்று உள்ளனர்.
பின்னர் மீண்டும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சில நிமிடங்களுக்கு முன்புதான் குழந்தை இறந்து உள்ளது என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முதல் முறையாக வரும் போதே குழந்தைக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து இருந்தால் உயிர் காப்பாற்றியிருக்கலாம் என எண்ணி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பெற்றோர் தரப்பிலிருந்து தெரிவிக்கும்போது, "நாங்கள் முதலில் மருத்துவமனைக்கு வரும் போதே குழந்தை இறந்து விட்டது என தெரிவித்து இருந்தனர். ஆனால் நான்கு மணி நேரத்திற்கு பிறகு குழந்தையின் உடல் அசைந்து உள்ளது. முதலில் வரும்போதே சரியாக சிகிச்சை அளித்து இருந்தால் இப்படி ஒரு விபரீதம் நடந்து இருக்காது" என வருந்தி கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.