ஜல்லிக்கட்டு போட்டியின் வகைகள் குறித்து, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பிரபலமான இடங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று நேற்று தொடங்கிய போட்டி இல்லை. நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வின் அங்கமாக மாறி உள்ளது. ஏறு தழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான சான்றுகளை பல சங்ககால இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு எவ்வளவு தொன்மையானது என்று அறிந்து கொள்ள முடியும்.
ஜல்லிக்கட்டு என்ற பெயர் எப்படி வந்தது?
ஆதிகாலத்தில் பெண்கள் தங்கள் கணவர்களை தேர்ந்தெடுக்க ஜல்லிக்கட்டு விளையாட்டு பயன்படுத்தப்பட்து. மாட்டை அடக்கி வெற்றி பெறும் வீரர்களை பெண்கள் தங்கள் மணமகன்களாக தேர்வு செய்தனர். பின்னர் சல்லிகாச்சு, தங்கக்காசு, வெள்ளி நாணயங்கள், ஆகியவை பரிசாக கொடுக்கப்பட்டு, தற்போது கார் பைக் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது.
2000 ஆண்டுகளை கடந்து தமிழரின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு.. வரலாறும்.. முக்கியத்துவமும்..
முதலில் இந்த விளையாட்டு சல்லிக்கட்டு என்றே அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் சல்லி எனப்படும் நாணயங்களை மாட்டின் கொம்பில் கட்டிவிடுவாரகளாம். அந்த மாட்டை அடக்கும் வீரனுக்கு அந்த சல்லிக்காசுகள் பரிசாக வழங்கப்படும். பின்னர் காலப்போக்கில் மருவி ஜல்லிக்கட்டு என்று மாறி உள்ளது.
ஜல்லிக்கட்டு வகைகள் :
ஜல்லிக்கட்டு விளையாட்டு பல வகைகளில் விளையாடப்படுகிறது. வாடிவாசல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடம் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரபலமானவை.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு :
வாடிவாசல் எனும் வாயில் வழியாக காளை திறந்துவிடப்படும். அப்போது சீறி வரும் காளையை வீரர் ஒருவர் மட்டும் அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் செல்ல வேண்டும். அப்படி சென்றால் அந்த வீரர் வெற்றி பெற்றதாக அர்த்தம். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அர்த்தம். இந்த வகை ஜல்லிக்கட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும்.
வேலி மஞ்சுவிரட்டு :
மதுரை, மானாமதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இந்த வகை மஞ்சுவிரட்டு நடைபெறும். ஒரு திறந்தவெளியில் காளையின் மூக்கணாங்கயிறு அவிழ்க்கப்படும். காளை எந்த திசை நோக்கி வேண்டுமானாலுமோடலாம். வீரர்கள் அதை அடக்க வேண்டும்.
மாட்டுப் பொங்கல் 2024 : மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?
வடம் மஞ்சு விரட்டு :
வடம் என்றால் கயிறு என்று பொருள்படு. காளையை 49 அடி நீள கயிற்றில் கட்டுப்பட்டு மைதானத்தில் நடுவில் உள்ள கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும். அதிகபட்சம் 49 அடி வரை மட்டுமே வட்டமாக வர முடியும். அந்த வட்டத்திற்குள் சென்று வீரர்கள் மாட்டை அடக்க வேண்டும். 7 அல்லது 8 பேர் கொண்ட அணி காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
ஜல்லிகட்டு 2024 : நாட்டு மாட்டின வகைகள்
பொதுவாக இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காங்கேயம் காளைகள் புலிக்குளம் வகை காளைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. காங்கேயம் காளைகளை விட புலிக்குளம் காளை அதிக ஆக்ரோஷமானவை என்று கருதப்படுகிறது. இவை தவிர தேனி மலை மாடு, பர்கூர் மலை மாடு, ஆலம்பாடி மலைமாடுகளும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பிரபலமான இடங்கள்
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்றாலும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் போட்டிகள் உலகளவில் பிரபலமானவையாக உள்ளன. குறிப்பாக பின்வரும் இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரபலமானவை.
தமிழரின் வாழ்வியலில் நெடுங்காலமாக இடம்பெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 20214-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டது. ஆனால் 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இளைஞர்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த இந்த போராட்டம் புரட்சியாக மாறியது. இந்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல சட்ட நடவடிக்கைகள் மூலம் ஜல்லிக்கட்டு மீண்டும் கோலாகலாமக நடந்து வருகிறது.