அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு..! ஏப்ரல் 18 ஆம் தேதி இப்படி ஒரு திட்டமா..?

By ezhil mozhiFirst Published Apr 9, 2019, 6:42 PM IST
Highlights

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

பின்னர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவே தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சமயத்தில் மீண்டும் ஒரு புது குழப்பம் ஏற்பட்டு உள்ளது. 

அதாவது மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் உள்ள 15 ஆயிரம் தபால் வாக்குகளில் 10% பணியாளர்களுக்கு கூட ஓட்டுச் சீட்டுகள் கிடைக்கவில்லை என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரான நீதிராஜன் கூறியது என்னவென்றால்... "மதுரையில் மட்டுமே 15 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளோம். தேர்தல் பணிக்கான பயிற்சி கடிதங்கள் மற்றும் தபால் ஓட்டுகான விண்ணப்பம் மார்ச் மாதம் 24 ஆம் தேதி வந்தது. அவரவர் மாவட்டத்திற்குள் தேர்தல் பணி புரிபவர்கள் அந்தந்த பூத்களில் தங்களது ஓட்டுகளை பதிவு செய்யலாம் என்றும், பிற மாவட்டங்களுக்கு பணி ஒதுக்கப்படும்போது தபால் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


ஆனால் இதுகுறித்து நேற்று ஆய்வு செய்த போது 10 சதவீதம் பேருக்கு மட்டுமே ஓட்டு சீட்டு கிடைத்துள்ளது. எஞ்சிய 90 சதவீதம் பேருக்கு ஓட்டு சீட்டு கிடைக்கவில்லை

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என கருதி தபால் வாக்குகளை முடக்க பார்க்கிறார்கள் என்றும் ஏற்கனவே ஆசிரியர்களை தேர்தல் பணியில் நியமிக்க கூடாது என அதிமுக அமைச்சர்கள் சிலர் கூறி இருப்பதை வைத்து பார்க்கும்போது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்து உள்ளனர்.

 மேலும் உரிய முறையில் உரிய நேரத்தில் தபால் ஓட்டு சீட்டுகளை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க செய்யவில்லை என்றால் தேர்தல் தேதியான ஏப்ரல்18 ஆம் தேதியன்று தேர்தல் பணியை புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளார்.

click me!