
நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் இட்லி, தோசைக்கு வீடுகளில் தான் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தனர். ஆனால் இன்றைய நவீன காலத்தில் எல்லாருடை வீடுகளிலும் பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் இருப்பதால் ஒருமுறை அரைத்த மாவை 7 முதல் 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறோம். ஆனால் இப்படி நீண்ட நாட்கள் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இட்லி, தோசை மாவு பிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் :
1. பாக்டீரியாக்கள் வளரும்
பொதுவாக மாவு புளிக்கும் போதே அதில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கும். அதனால்தான் அரைத்த மாவை 2-3 நாட்கள் வரை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் மாவை வைத்து பயன்படுத்தினால் அதில் பாக்டீரியாக்கள் பெருகி நச்சுக்களை உருவாக்கும். அதிலும் குறிப்பாக மாவை ஒரே பாத்திரத்தில் வைக்கும் போது அதன் வளர்ச்சியானது ரொம்பவே அதிகமாக இருக்கும்.
2. வீக்கம் ஏற்படும்
இட்லி மாவு அரைக்கும் போது அதில் வெந்தயத்தையும் சேர்த்து அரைப்பது வழக்கம். ஆகவே, மூன்று நாட்களுக்கு மேல் மாவை வைத்து பயன்படுத்தினால் உடலில் வீக்கம் ஏற்படும். அதிலும் குறிப்பாக இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாவில் சுட்ட தோசை, இட்லி சாப்பிட்டால் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
3. செரிமான பிரச்சனைகள்
அரைத்த இட்லி தோசை மாவை மூன்று நாட்களுக்கு மேல் வைத்தால் அது ஜீரணிப்பது கடினமாக இருக்கும். இதன் விளைவாக வாயு, வயிற்று எரிச்சல் போன்ற பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
4. ஊட்டச்சத்து இழக்கப்படும் :
அறை வெப்பநிலை அல்லது ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் மாவு வைத்து பயன்படுத்தினால் அதன் ஊட்டச்சத்து மதிப்பானது இழக்கப்படுகிறது. அதனால் அதை சாப்பிட்டாலும் கூட எந்தவித சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதில்லை.
5. நெஞ்செரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம்
இட்லி தோசை மாவு 2-3 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தினால் அது நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற அசெளகரியத்தை ஏற்படுத்தி விடும்.
இட்லி, தோசை மாவு கெட்டுப் போனதை அறிவது எப்படி?
இட்லி தோசை மாவு கெட்டு போனதை அறிய முதலில் உங்களது ஒரு விரலை மாவின் மீது மெதுவாக அழுத்துங்கள். மாவு மென்மையாகவும், பஞ்சு போல இருந்தால் அது நல்லது. தயக்கமி,ன்றி பயன்படுத்தலாம். அதுவே மாவு கடினமாகவும், உலர்ந்ததுமாக இருந்தால் அதை ஒருபோதும் பயன்படுத்தவே கூடாது.
இட்லி, தோசை மாவு கெட்டுப் போவதை தடுக்க வழிகள் :
- மாவை ஒரே பாத்திரத்தில் வைப்பதற்கு பதிலாக சிறிய அளவில் இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களில் பிரித்து வைத்து பயன்படுத்தவும். இப்படி செய்தால் பாக்டீரியாக்கள் வளர்ச்சி குறையும்.
- மாவை ஒருபோதும் அதிக வெளிச்சம், வெப்பம் மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவே கூடாது.
- மாவை தேவைப்படும்போது மட்டும் எடுத்து உடனே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.