இந்தியாவில் உள்ள ஒரு மர்மமான கிராமம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன. அதுதொடர்பாக விடை கிடைக்காத மர்மங்களும் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒரு மர்மமான கிராமம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். அசாம் மாநிலத்தில் உள்ள ஜடிங்கா என்ற கிராமத்தை குறித்து தான் பார்க்கபோகிறொம். இந்த இடம் அழகான இயற்கைக்காட்சிகளுடன் கூடிய அமைதியான இடம். ஆனால் மிகவும் விசித்திரமான காரணத்திற்காக அறியப்படுகிறது. இந்த இடத்தில் 2,500 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
'பறவைகள் தற்கொலை' செய்து கொள்ளும் இடமாக இந்த இடம் உலகளவில் அறியப்படுகிறது. அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் இருந்து தெற்கே 330 கிலோமீட்டர் தொலைவில் ஜடிங்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இந்த இடம் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது. ஆம். இந்த இடத்தில் பறவைகள் பெருமளவில் தற்கொலை செய்துகொள்வதே இதற்குக் காரணம். விசித்திரமான விஷயம் என்னவென்றால், மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரை பறவைகள் இதைச் செய்கின்றன. உள்ளூர் பறவைகள் மட்டுமல்ல, இங்குள்ள பெரும்பாலான புலம்பெயர்ந்த பறவைகளும் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது..
சுமார் 40 வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் தற்கொலை செய்துகொள்ளுவதாக கூறப்படுகிறது.. இதன் காரணமாக, பலர் ஜடிங்காவை பூமியின் பயமுறுத்தும் இடங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, இப்பகுதியில் நடக்கும் பறவைகளின் தற்கொலைகளுக்கு எந்த காரணமும் தெரியவில்லை. இருப்பினும், தற்போது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ சில கோட்பாடுகளை முன்வைக்கிறது. அந்த வீடியோவில் ஜடிங்கா கிராமம் சபிக்கப்பட்டதாகவும், பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த நிகழ்வு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
அப்பகுதியில் உள்ள அதிகப்படியான காந்தப்புலம் இந்த சம்பவங்களுக்கு காரணம் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். இதுகுறித்து பல கோட்பாடுகள் தொடர்ந்து எழுந்தாலும், இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள சரியான விளக்கத்தை யாராலும் நிரூபிக்க முடியவில்லை.
எனினும் பல கிராம மக்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் ‘தீய ஆவிகள்’ இருப்பதாக பல ஆண்டுகளாக நம்பி வருகின்றனர். உள்ளூர்வாசிகள் இதுகுறித்து கூறிய போது “ பறவைகள் மயக்கமடைந்து, திசைதிருப்பப்பட்டு, மரங்கள், விளக்குகள் மற்றும் கட்டிடங்களில் கூட மோதிக் கொள்கின்றன.” என்று தெரிவிக்கின்றனர்.
ஜடிங்கா கிராமத்திற்குள் இரவு நேரத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு இறந்துள்ளன. இந்த நிகழ்வு 1910 இல் தொடங்கியது. இருப்பினும், 1957-ம் ஆண்டில் தான் இதுகுறித்து வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் தேயிலை தோட்டக்காரர் E.P Gee தனது ‘Wild Life of India’ புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டபோது இது நடந்தது வெளியே தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.