WHO வின் மிக முக்கிய அங்கமான நிா்வாகக் குழுத் தலைமை பொறுப்பு "இந்தியாவு"க்கு! உலகையே ஆட்டிப்படைக்கும் "கெத்து"

By ezhil mozhiFirst Published Apr 24, 2020, 12:03 PM IST
Highlights

தற்போது நிர்வாக குழுவின் தலைமைப் பொறுப்பை ஜப்பான் வகித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்க உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழு சென்ற ஆண்டே முழுமனதாக பரிந்துரை செய்தது. 

WHO வின் மிக முக்கிய அங்கமான நிா்வாகக் குழுத் தலைமை பொறுப்பு "இந்தியாவு"க்கு..! உலகையே ஆட்டிப்படைக்கும் கெத்து..! 

கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகளை ஸ்தம்பித்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது இந்தியா

வரும் மே 18 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் மாநாடு நடைபெற உள்ள நிலையில், நிர்வாகக் குழுவில் இடம் பெறப்போகும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின் அடுத்த நான்கு நாட்களில், அதாவது மே 22ஆம் தேதி நிர்வாக குழுவின் "முதல் கூட்டம்" நடைபெற உள்ளது. அந்நாளில் இந்தியாவின் உறுப்பினர்களும் பதவி ஏற்ற உள்ளனர்.

தற்போது நிர்வாக குழுவின் தலைமைப் பொறுப்பை ஜப்பான் வகித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்க உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழு சென்ற ஆண்டே முழுமனதாக பரிந்துரை செய்தது. அதன்படி, இந்த குழுவில் இந்தியா 3 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து வரும் மே மாதம் நிர்வாகக் குழுவுக்கு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.

இந்த நிர்வாக குழுவின் முக்கியத்துவம் என்ன?

உலக சுகாதார நிறுவனம் எடுக்கக்கூடிய மிக முக்கிய முடிவுகளுக்கு நிர்வாகக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதில் இடம் பெறும் 34 உறுப்பினர்களும் கலந்தாலோசித்து பல முக்கிய முடிவுகளை  எடுப்பார்கள். நிர்வாகக் குழுவின் தலைவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனருடன் இணைந்து செயல்படுவார். அதேவேளையில் தற்போது உள்ள who வின் இயக்குனர் டெட்ரோஸின் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அவருக்குப்பின் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் முக்கிய இடத்தில் இந்தியா பங்கு வகிக்கும் என்பது கூடுதல் தகவல். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உலக சுகாதார அமைப்பில் உள்ள நிதிநிலை குழுவிலும் இந்தியா இடம்பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பதவியில் இருக்கக்கூடிய இந்தோனேசியாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள சூழலில் இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக உலக சுகாதார நிறுவனம் ஏற்படுத்திய சீர்திருத்த துறை தலைவராக சென்னையை சேர்ந்த டாக்டர் சௌமியா சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகளே ஆச்சரிப்படும் விதமாக இந்தியாவின் செயல்பாடு உள்ளது. இந்த ஒரு நிலையில், உலக அளவில் பெரும் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளதால், உலக மக்களின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.

click me!