எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாக சூப்பர் "10 டிப்ஸ்" இதோ..!

By ezhil mozhiFirst Published Apr 23, 2020, 8:32 PM IST
Highlights

அடுத்து வரும் மூன்று மாதங்களில் கண்டிப்பாக உங்களது உடல் எடை குறைந்து இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும்.

எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாக சூப்பர் டிப்ஸ் இதோ..!

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதும், தினமும் காலை எழுந்தவுடன் ஜிம்முக்கு சென்று வருவதும், உணவு கட்டுப்பாடு இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் குறைந்தபட்சம் 12 வாரங்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

அதாவது அடுத்து வரும் மூன்று மாதங்களில் கண்டிப்பாக உங்களது உடல் எடை குறைந்து இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும்.

1.முதலாவதாக எந்த காரணத்தை கொண்டும், சிற்றுண்டி அதாவது காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதை தவிர்த்து விடாதீர்கள்.

2.சரியான நேரத்தில் தேவையான அளவு உணவு எடுத்துக்கொள்வது நல்லது.

3.பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4.எப்போதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். 

5. அதிகமாக பைபர் உள்ள உணவு எடுத்துக்கொள்வது சிறந்தது. காரணம் இதனை எடுத்துக் கொண்டால் பசி அடிக்கடி ஏற்படாது. அதிக அளவு உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

6.எப்போதெல்லாம் எந்த எந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பட்டியலிடுங்கள். அதைப் பார்த்து, அதற்கேற்றவாறு சரியான நேரத்தில் சரியான அளவு உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

7. சிறிய தட்டை பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு பயன்படுத்தும் போது தேவையான உணவை நாம் மெதுவாக உண்பதுடன் நிறைய உணவை எடுத்துக்கொண்ட உணர்வு கிடைக்கும். எனவே அளவுக்கு அதிகமான உணவை தவிர்க்கலாம்.

8.ஜங்க் ஃபுட், எடுத்துக்கொள்வதை நிறுத்தவேண்டும் சாக்லேட் பிஸ்கட் இதை தவிர்த்து, பழங்களை எடுத்துக் கொள்வதும், ரைஸ் கேக், ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

9. மது அருந்துவதை நிறுத்த வேண்டும்

10. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று  வேளையும்,சரியான அளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலே உள்ள இந்த 10 டிப்ஸ் தொடர்ந்து முயற்சி செய்து கடைபிடித்து வந்தால் ஏராளாமான நன்மை கிடைப்பதுடன் உடல் எடையும் குறையும்.  

click me!