புகைபிடிப்பவரா நீங்கள்..? கொரோனாவுக்கு உங்களை தான் "ரொம்ப பிடிக்கும்"...! WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

By ezhil mozhiFirst Published Apr 24, 2020, 10:54 AM IST
Highlights

உலக சுகாதார நிறுவனம் ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைபிடிப்பவரா நீங்கள்..? கொரோனாவுக்கு உங்களை தான் "ரொம்ப பிடிக்கும்"...! WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் ஏற்பட்ட மாற்றம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகள் உலக நாடுகளை  பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அமெரிக்காவும் கொரோனாவில் பிடியில் இருந்து தப்பிக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் நோய் தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஓர் முடிவு ஏற்படும் என  என எதிர்பார்க்கப்படுகிறது 

உலக அளவில் கொரோனா 

உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,572 பேர் பலியாகி உள்ளனர். 1,90,499 பேர் இதுவரை உயிரிழந்து  உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 27,16,388 ஆக உள்ளது.

அமெரிக்கா 

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,325 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,80,204 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,845 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 638, ஸ்பெயினில் 440, இத்தாலியில் 464, பிரான்ஸ் 516, ஜெர்மனி 260 பேர் உயிரிழந்து உள்ளனர் 

இந்தியாவில் 23,077 பேருக்கு கொரோனா....!

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700லிருந்து 23,077 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325 லிருந்து 4,749 ஆக அதிகரிப்பு உள்ளது.

இந்த ஒரு நிலையில், உலக சுகாதார நிறுவனம் ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள், நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக கொண்டவர்கள், நீரிழிவு நோய், சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிதாக கொரோனா பாதிப்பு  ஏற்பட வாய்ப்பு  உள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சி தரும் விஷயமாக புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம் 

click me!