முடிவு கட்ட காத்திருக்கும் இந்தியா..! பல அதிரடி முடிவில் மோடி.. !

By ezhil mozhiFirst Published Apr 16, 2019, 3:36 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ளது....மீண்டும் ஆட்சியை கைப்பற்றப்போவது பாஜக வா..? அல்லது தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ள காங்கிரஸா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ளது....மீண்டும் ஆட்சியை கைப்பற்றப்போவது பாஜக வா..? அல்லது தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ள காங்கிரஸா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

இருந்தாலும், காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மக்கள் பிரச்சனை சார்ந்த விஷயங்களும், சில முக்கிய திட்டங்களும் இடம் பிடித்து இருந்தது. ஆனால் பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சி, இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சுதந்திரம், அந்தஸ்து இவற்றையெல்லாம் முக்கியத்துவமாக காண்பிக்கபட்டிருந்தது.

காரணம் உலக அளவில் இந்தியா மிக விரைவில் வல்லரசு நாடாக உயர வேண்டும் என்பதும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்பதும் உணர வைக்கின்றது. இதற்கெல்லாம் உதாரணம் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடியும் நாம் நன்கு அறிந்ததே.

இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா கொடுத்த பத்திலடியில்  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக அறியப்படும், இருந்தபோதிலும் ஜெய்ஷ் இமுகமது அமைப்பின் வலிமையை நிரூபிக்க புதிய தீவிரவாத தளங்களை அமைத்துள்ளதாகவும், அதை ஒரு ஜெய்ஷ் கமாண்டர் வழி நடத்தி வருவதாகவும் காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

மேலும் தீவிரவாத அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை மணி எழுந்துள்ளது.

இதனை எல்லாம் நன்கு உணர்ந்த மோடி அரசு, தற்போது எந்த ஒரு பிரச்சனையையும் கையாள, இந்தியா தயாராக இருக்க தேவையான  அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதற்கான பல திட்டங்களையும் இப்போதே தொடங்கி விட்டதாம்.மேலும் உலக மக்கள் பார்வையில் மிகவும் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் முடிவுகளில் மேலும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற  நம்பிக்கையில் இப்போதே, நிதி ஆயோக் ஆலோசகருக்கு மீண்டும் ஆட்சி ஏற்று, அடுத்து வரும் 100 நாட்களில் என்னென்னெ திட்டம்  செயல்படுத்த பட வேண்டும் என்ற லிஸ்ட் இப்போதே தயார் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

click me!