உலகின் சிறந்த உணவு இதுதான்.! 2022ம் ஆண்டின் டாப் 50 நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

By Raghupati RFirst Published Dec 25, 2022, 4:34 PM IST
Highlights

உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இந்தியாவின் உணவு வகைகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

உணவுகள், அதில் உள்ள பொருட்கள் மற்றும் பானங்கள் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் உணவுகள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து கிரீஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளன. இந்தியா 4.54 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!

நம் இந்திய நாட்டின் சிறந்த உணவுகளில் கரம் மசாலா, மலாய், நெய், வெண்ணெய் பூண்டு நான், கீமா போன்றவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 460 உணவுகள் உள்ளன. மேலும், இந்திய உணவு வகைகளை ருசிப்பதற்கான சிறந்த உணவகங்கள் ஸ்ரீ தாகர் போஜனலே (மும்பை), காரவல்லி (பெங்களூரு), புகாரா (புது டெல்லி), டம் புக்த் (புது டெல்லி), கொமோரின் (குருகிராம்) மற்றும் பிற 450 உணவகங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, துருக்கியே, பிரான்ஸ் மற்றும் பெரு ஆகியவை சிறந்த உணவு வகைகளைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகவும் பிரபலமான சீன உணவு வகை, பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த ட்வீட் இதுவரை 38 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ளது.

இந்த பட்டியல் சரியாக இல்லை என்றும், வேறு எந்த உணவு வகைகளையும் விட தங்கள் நாட்டு உணவு சிறந்தது என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். அதில் பதிவிட்ட ஒருவர், இந்த பட்டியலில் பிழை ஏற்பட்டதாக நினைக்கிறேன். இங்கிலாந்து இந்த பட்டியலில் உள்ளது என்று கிண்டல் செய்துள்ளார்.

Which one is your favorite?
Full top 95 list: https://t.co/194Xj0ZMZ4 pic.twitter.com/v4uYHnGzGD

— TasteAtlas (@TasteAtlas)

மற்றொருவர், நான் இந்த நாடுகளில் 40/50 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளேன். இது மிகவும் தவறான பட்டியல். மொராக்கோ, எத்தியோப்பியா, மியான்மர் போன்ற பல நாடுகளை நீங்கள் விட்டுவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது போல பலரும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க.. ஆப்ரேசன் 2024 கேம்! தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்.. முடிக்கும் ஜே.பி நட்டா - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

click me!