கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மற்றவருக்கு பரிசாக கொடுக்கக்கூடாத பொருட்கள்- இதோ..!!

By Dinesh TGFirst Published Dec 25, 2022, 1:07 AM IST
Highlights

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே ஒவ்வொருவருக்கும் பரிசுகள் வந்து குவிந்துவிடும். அந்த வகையில் எந்த பொருட்களை எல்லாம் பரிசாக வழங்கக்கூடாது என்று விரிவாக பார்க்கலாம்.
 

இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. மக்கள் அதற்காக தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கிறிஸ்துவ மக்கள் அல்லாதோர் கூட இப்பண்டிகையை கொண்டாட பெரும் முனைப்பு காட்டி வருகின்றன. பரஸ்பரம் பரிசுகள் வழங்குவது மட்டுமின்றி, வீடுகளில் விருந்துக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.. அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் அருகில் உள்ளவருக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் ஏற்கனவே முடிவு செய்திருப்பீர்கள். ஆனால்  கிறிஸ்துமஸ் அன்று உங்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் அன்பானவர்களுக்கும் பரிசளிக்கக் கூடாத பொருட்கள் குறித்து யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கடவுள் சிலை

 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது யாருக்கும் கடவுள் சிலையை பரிசளிக்கக்கூடாது. அது கடவுள் இயேசு கிறிஸ்துவாக இருந்தாலும் சரி அல்லது வேறு மத கடவுளாக இருந்தாலும் சரி, எந்தவொரு கடவுள் சிலையையும் மற்றவர்களுக்கு பரிசாக வழங்கக்கூடாது.

செல்லப்பிராணிகள்

 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் பிள்ளைகளுக்கு செல்ல பிராணிகளை கொடுக்க நினைத்தால், அவ்வாறு செய்யாதீர்கள், ஏனெனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செல்லப்பிராணிகளை பரிசாக கொடுப்பது அபசகுணமாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸுக்கு தயாரிக்கப்படும் விசேஷமான கேக்- தெரியுமா உங்களுக்கு..?

பணம்

இந்தியாவில் பரிசு என்றாலே பணமும் ஒரு வகையில் பரிசு தான். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி யாருக்கும் பணம் கொடுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வேறு ஏதாவது பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம்.

கைக்குட்டை

 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் அருகாமையில் உள்ளவர்களுக்கு கைக்குட்டை அல்லது வாசனை திரவியத்தை பரிசளிக்க வேண்டாம். இது உறவில் விரிசலை உண்டாக்கும் எனவும், இவை வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வணிகப் பொருட்கள் 

 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, ​​வணிகம் தொடர்பான பொருட்களை நீங்கள் யாருக்கும் வழங்கக்கூடாது, ஏனெனில் இதன் காரணமாக உங்களுக்கும் தீங்கு நேரிடலாம். அதேபோல பாயும் நீர்வீழ்ச்சி, ஆமை, மீன், இயற்கை காட்சிகள் அடங்கிய படங்கள், முள் அல்லது பொன்சாய் மரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பரிசாக வழங்கக்கூடாது.

click me!