பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன்?

Published : Jan 14, 2020, 01:51 PM IST
பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன்?

சுருக்கம்

புத்தரிசியில்... பொங்கல் வைத்து,  புதிய ஆடை உடுத்தி பொங்கல் திருவிழாவை வரவேற்க தமிழ் மக்கள் பலரும் தயாராகி விட்டனர். அதே நேரத்தில் நம், முன்னோர்கள் பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும். அப்படி பொங்கும் திசையை வைத்து, இந்த வருடம் முழுவதும் எப்படி இருக்கும் என்பதையும் கணித்து கூறியுள்ளனர்.  

புத்தரிசியில்... பொங்கல் வைத்து,  புதிய ஆடை உடுத்தி பொங்கல் திருவிழாவை வரவேற்க தமிழ் மக்கள் பலரும் தயாராகி விட்டனர். அதே நேரத்தில் நம், முன்னோர்கள் பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும். அப்படி பொங்கும் திசையை வைத்து, இந்த வருடம் முழுவதும் எப்படி இருக்கும் என்பதையும் கணித்து கூறியுள்ளனர்.

கேஸ் அடுப்பில் பொங்கல் வைப்பவர்கள் கூட பொங்கல் பொங்கி வரும்போது, அடுப்பை சிம்மில் வைக்காமல் அதனை பொங்க விடுவதே நலம்.

சரி... பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் என்பதை பார்ப்போம்...

கிழக்கு -  பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது சுமூகமாக நடக்கும். ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். உடை மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

மேற்கு - பொங்கல் மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். மகன் - மகளுக்கு வரன் தேடுபவராக இருந்தால் இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை குறிக்கும்.

வடக்கு - பொங்கல் வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் பண வரவு அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் போக வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடன் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.

தெற்கு திசையில் பொங்கல் பொங்கி வழித்தால் பிணி என்றே சொல்லலாம். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். எனவே உடல்நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நலம். 

 


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்