அடிச்சான் பாருடா சிக்ஸர்..! தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்.!

Published : Jan 13, 2020, 06:44 PM ISTUpdated : Jan 13, 2020, 06:47 PM IST
அடிச்சான் பாருடா சிக்ஸர்..! தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்.!

சுருக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தாங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார்.

அடிச்சான் பாருடா சிக்ஸர்..! தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்.! 

உலகெங்கும் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கலை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.  இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கனடா வாழ் தமிழர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தாங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர்

தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பான புரிதலும் கொண்ட பிரதமரை கனடா பெற்றிருப்பது தனிச்சிறப்பு என பொதுமக்கள் கனடா வாழ்  தமிழர்கள் பெருமிதம் தெரிவித்து உள்ளனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்