நெலமங்கலா அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்து பாட்டில்களில் முக்கிய தகவல்கள் கருப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடாகாவில் நெலமங்கலா அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்து பாட்டில்கள் பல முக்கிய தகவல்கள் மீது கருப்பு மை பூசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் பெயர், பேட்ச் நம்பர், லைசன்ஸ் விவரங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ளதாக பல பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் ஒருவர் பேசிய போது “ நான் அடிக்கடி என் குழந்தையை மருத்துவ சோதனைக்காக இங்கே அழைத்து வருவேன். கடந்த புதன்கிழமை மாலை என் மகனை அழித்து வந்தேன். அப்போது அவனுக்கு கொடுக்கப்பட்ட பாராசிட்டாமல் சிரப் பாட்டிலில் கருப்பு மையால் சில தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் நான் கேட்டேன். அவர்கள் எனக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேலும் அந்த மருந்தை என மகனுக்கு கொடுக்க வற்புறுத்தினர். ஆனால் இந்த தரமற்ற மருந்து என் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து எனக்கு கவலையாக உள்ளது” என்று தெரிவித்தார்.
undefined
குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமா வர இதுதான் காரணம்; உஷாரா இருங்க!!
நெலமங்களா மருத்துவமனை மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் சோனியா இதுகுறித்து பேசிய போது “குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான பாராசிட்டமால் சிரப்புக்கான ஆர்டர் ஏற்கனவே செய்யப்பட்டது. இருப்பினும், சரியான லேபிளிங் அல்லது தகவல் இல்லாமல் இந்த சிரப் உட்பட பல மருந்துகளை சுகாதாரத்துறை வழங்கியது. பெங்களூரு கிராமப்புற மாவட்ட சுகாதார அலுவலரிடம் (DHO) நான் தெரிவித்த பிறகு, இந்த மருந்துகள் ஆய்வகத்தில் தரத்திற்காக சோதிக்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முக்கியத் தரவை மறைப்பதற்காக லேபிள்கள் வேண்டுமென்றே அதில் மறைக்கபப்ட்டிருந்தது, இருப்பினும் சிரப் சிகிச்சைக்காக விநியோகிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளுக்கு கருப்பு நிற லேபிள்களுடன் கூடிய பாராசிட்டமால் சிரப் பாட்டில்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
அடிக்கடி பாராசிட்டமால் எடுத்துக்குறீங்களா? அதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?
கர்நாடக மாநில மருத்துவப் பொருட்கள் கழகத்தின் மூத்த ஆய்வக விஞ்ஞானி ஒருவர் இதுகுறித்து பேசிய போது "மாதிரிகள் ஆய்வகங்களில் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்படும்., முக்கியமான தகவல்களை கருப்பு குறிப்பான்களுடன் மறைப்பது மிகவும் அசாதாரணமானது, மேலும் சட்டவிரோதமானது. மாதிரிகளைப் பெறுவதற்கு முன், பேக்கேஜிங் பற்றிய தகவல்கள் டிகோட் செய்யப்படுகின்றன. நிலையான நடைமுறையின் படி, அவர் எந்த மருந்தை பரிசோதித்த பிறகு, அது அழிக்கப்பட வேண்டும். இந்த சிரப் பாட்டில்களை சிகிச்சைக்காக வெளியே அனுப்புவது, பேக்கேஜில் உள்ள தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தால் சட்டப்படி குற்றமாகும்." என்று தெரிவித்தார்.