உங்கள் இம்யூனிட்டியை... அதிகரிக்க வேண்டுமா? வெறும் 5 நிமிஷம் ஒதுக்குங்க பாஸ்!

manimegalai a   | Asianet News
Published : Jan 09, 2022, 06:25 AM ISTUpdated : Jan 09, 2022, 06:36 AM IST
உங்கள் இம்யூனிட்டியை... அதிகரிக்க வேண்டுமா? வெறும் 5 நிமிஷம் ஒதுக்குங்க பாஸ்!

சுருக்கம்

உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க தேனும், இலவங்கப் பட்டையும் கலந்த பானம் உதவும்.

காரனோ ஓமைக்ரான் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவ தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைகளில்,  இருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள நோய் எதிர்ப்பை சக்தியை அதிகரிப்பது அவசியம். எனவே, பல்வேறு வர்த்தக நிறுவனங்களும், அமைப்புகளும் நோய் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தும் உணவு வழிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றன. 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடல் ஆரோக்கியத்திற்காக வீட்டு வைத்தியமும், இயல்பாக உண்ணப்படும் உணவுப் பழக்கமும் நமக்குக் கைகொடுக்கின்றன. வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கும் இலவங்கப் பட்டையும், தேனும் மனித உடலுக்குப் பல்வேறு நலன்களை ஏற்படுத்தும் குணம் கொண்டவை. இவற்றால் செய்யப்படும் தேநீர் உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புக்கும் பயன்படுவதோடு, சளி, காய்ச்சல் முதலானவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. 

தேன், இலவங்கப் பட்டை - இரண்டிலும் நோயைக் குணப்படுத்தும் பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளன. தேன் உண்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் சரியாவதோடு, அழியும் நிலையில் உள்ள செல்கள் குணமாகின்றன. இலவங்கப் பட்டையும் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது. 

இந்த இரண்டு பொருள்களும் இணையும் போது, அவை அலர்ஜிகளுக்கு எதிராகவும், உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அமைகின்றன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் இதுகுறித்து கூறிய போது, தேனும், இலவங்கப் பட்டையும் அலர்ஜிகளுக்கு எதிராக செயல்படுவதோடு, நோய் எதிர்ப்பை வலுப்படுத்துவதாகவும்,  தெரிவித்துள்ளனர். எனவே இலவங்கப் பட்டையும் தேனும் சேர்க்கப்பட்ட தேநீர் உடல் நலனுக்குப் பெரிதும் பயன்படுகிறது. 

மிக சுலபமாக செய்யக் கூடிய இந்த தேநீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகுவது  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  

தேவையானப் பொருள்கள்:

1/4 டீஸ்பூன் இலவங்கப் பட்டைத் தூள்
1 டீஸ்பூன் தேன்
1 கப் தண்ணீர் 

செய்முறை:

1. முதலில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து இலவங்கப் பட்டைத் தூளைச் சேர்த்து, நன்கு கலக்கிவிடவும்.

2.  இரண்டாவது  2 முதல் 3 நிமிடங்களில் தண்ணீரின் கொதிப்பு அடங்குமாறு செய்ய வேண்டும். 

3. இதனை ஒரு கப்பில் ஊற்றி, அதனோடு தேன் சேர்த்து, சற்றே சூடு ஆறியவுடன் பருகலாம். 

இந்த வகையான தேநீர் நல்ல உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் பயன்படுகிறது.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்