ஸ்டாலின் கடவுள் நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொண்டால் விரைவில் முதல்வராகலாம்..! ஜாதக ஜோதிடர் ராசி ராஜன்..!

Published : Apr 09, 2019, 07:06 PM IST
ஸ்டாலின் கடவுள் நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொண்டால் விரைவில் முதல்வராகலாம்..! ஜாதக ஜோதிடர் ராசி ராஜன்..!

சுருக்கம்

கொளுத்தும் வெயிலில் அரைக்கை சட்டையில் பிரசாரம் செய்தால் கையெல்லாம் கறுத்துப் போகும், தோல் அலர்ஜி வரும். 

ஸ்டாலின் கடவுள் நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொண்டால் விரைவில் முதல்வராகலாம்..! ஜாதக ஜோதிடர் ராசி ராஜன்..!  

*    கொளுத்தும் வெயிலில் அரைக்கை சட்டையில் பிரசாரம் செய்தால் கையெல்லாம் கறுத்துப் போகும், தோல் அலர்ஜி வரும். அதனால இதெல்லாம் முடியுற வரைக்கும் முழுக்கை சட்டை போடுங்க! என்று மனைவி அனுராதா சொன்னதாலேயே, அப்படியொரு காஸ்ட்யூமில் வலம் வருகிறார் டி.டி.வி. தினகரன்:    செய்தி. 

(அனு மேடம், அப்படியே உங்க வூட்டுக்காரரை கொஞ்சமாச்சும் கோபப்பட சொல்லுங்க. என்ன பிரச்னை வந்தாலும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சுட்டே இருந்து எதிராளியை செம்ம டென்ஷனுக்கு ஆளாக்குறாரு. இவரு கொஞ்சமாச்சும் வருத்தப்பட்டு, டென்ஷன்பட்டு கோபப்பட்டால் தானே முதலும், துணையும்  நிம்மதிப்பட்டு சிரிக்க முடியும்?)

*    எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாய் இருக்கும் மு.க.ஸ்டாலின், நமது அமைச்சரைப் பார்த்து ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என்கிறார்: பிரேமலதா. 

(நல்ல வேளை இப்ப ஜெயலலிதா இல்லை. ஒரு வேளை அம்மா இருந்து, இந்தம்மா அந்தம்மாளுக்கு பிரசாரம் பண்ணப்போன இடத்துல, ”நம்ம ஜெயலலிதாவை பார்த்து ஸ்டாலின் ’டான்ஸி ஜெ., சொத்துக்குவிப்பு ஜெ., வாய்தா ஜெ.ன்னு’ குற்றம் சொல்கிறார்.” அப்படின்னு பேசி வெச்சிருந்தால், அந்த வேன் என்னாகியிருக்கும், ஓ.மை.காட்!)

*    சிம்ம சந்திரனை, கும்ப சூரியன் பார்த்தால்தான் அரசியலில் மேயர், துணை முதல்வர் போன்ற பதவிகள் கிடைக்கும். அது ஸ்டாலினுக்கு கிடைத்தது. ஸ்டாலின் கடவுள் நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொண்டால் விரைவில் முதல்வராகலாம்: ஜாதக ஜோதிடர் ராசி ராஜன். 

(க்கும், தி.மு.க.வேட்பாளர் லிஸ்டை வெளியிடுறதுக்கு மின்னாடி, கோபாலபுரம் வீட்ல கோபுர அலமாரிக்குள்ளே இருக்குற சாய்பாபாவுக்கு, அப்படியே தன்னோட தாத்தா பாட்டியை வணங்குற கேப்புல ஸ்டாலின் கும்புடு போட்டதை நீங்க கவனிக்கலையா ராசிஜி! இன்னா ஜோதிடம் போங்கோ நீங்க.)

*    கேப்டனின் உடல்நிலை மோசமானதில் இருந்து கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் சுதீஷ். கூட்டணி விஷயத்திலும் பிரேமலதாவை கன்சல்ட் பண்ணாமலேயே துரைமுருகனிடம் பேசினார்: தே.மு.தி.க. முக்கியஸ்தர்கள். 

(சரி, சரி, தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு ‘புத்துணர்ச்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ன்னு ஒண்ணு பொதுச்செயலாளர் சுதீஷ் தலைமையில் உருவாகிறது என்பதை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்வதில்  மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.)

*    நெகடிவ் பிரசாரத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. யாரைப் பற்றியும் தனி நபர் தாக்குதல்களை எங்கள்  தலைவர் ஸ்டாலின் விரும்புவதில்லை. எனவேதான் பாசிடீவ் டோனிலேயே பிரசாரத்தை கொண்டு செல்கிறோம்.: தி.மு.க. ஐ.டி.விங் மாநில துணைச் செயலாளர் சேகர்.
(வாவ்!....சூடு இருக்குதா? சொரணை இருக்குதா? சசிகலாவின் காலில் விழுந்து பதவி வாங்கிட்டு, இன்னைக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் ‘மக்கள் செல்வாக்கில் முதல்வரானேன்’ என்று பேசுகிறாயே!- இதெல்லாம் உங்க ஊர்ல பாசிடீவ் விமர்சனங்களா பாஸ்?)

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Vitamin B12 Deficiency Habits : இந்த 'காலை' பழக்கங்களை உடனே விடுங்க! உடலில் வைட்டமின் பி12 அளவை குறைக்கும்..!
இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்