தேவை இல்லாமல் வெளியில் சுற்றினால் "14 நாள் தனிமை சிறை"..! அமைச்சர் அதிரடி!

By ezhil mozhiFirst Published Mar 31, 2020, 7:27 PM IST
Highlights

அத்தியாவசிய தேவைகளுக்காக, மட்டுமே மக்கள் காலை 9 மணி முதல் 1 மணிக்குள்  வெளியே வரலாம் என்றும் அதிலும் ஒருவர்  மட்டுமே செல்ல வேண்டும் எனவும் இரண்டு அல்லது மூன்று பேர்  சேர்ந்து வெளியே செல்ல கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 

தேவை இல்லாமல் வெளியில் சுற்றினால் "14 நாள் தனிமை சிறை"..! அமைச்சர் அதிரடி!

கொரோனா தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாநில அரசும்  கெடுபிடி காட்டி மக்களின்  நடமாட்டம் வெகுவாக குறைக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும், அத்தியாவசிய தேவைகளுக்காக, மட்டுமே மக்கள் காலை 9 மணி முதல் 1 மணிக்குள்  வெளியே வரலாம் என்றும் அதிலும் ஒருவர்  மட்டுமே செல்ல வேண்டும் எனவும் இரண்டு அல்லது மூன்று பேர்  சேர்ந்து வெளியே செல்ல கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது  ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், கார் ஆட்டோ  உள்ளிட்ட வாகனங்களை கட்டாயம் எடுத்து செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும்  மருத்துவமனை, இறப்பு  உள்ளிட்ட மிக மிக முக்கியமானவற்றிற்கு செல்லும் போதும் மட்டும் இதற்கான விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இப்படி இருக்க... எதற்கும் அடங்காத புள்ளிங்கோஸ்.... அவ்வப்போது வெளியில் சென்று போலீசிடம் சிக்கி தோப்பு கரணம் போட்டு வீடு திரும்புகின்றனர் .கொரோனா விபரிதம் புரியாமல் இவ்வாறு நடந்துகொண்டால் நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்த அரசு தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்துகிறது 

இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் 

தேவை இன்றி சாலையில் சுற்றி திரிந்தால் 14 நாட்கள் கட்டாயம் தனிமை சிறையில் வைக்கப்படுவார்கள் என்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்து பணியாற்றுபவர்களை யாராவது விரட்டி அடித்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை பொருட்களை  கூடுதல் விலைக்கு விற்றால் வியாபாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

click me!