ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..! 2 சூப்பர் சலுகையால் வாடிக்கையாளர்கள் குஷி..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 31, 2020, 06:38 PM IST
ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..!  2 சூப்பர் சலுகையால் வாடிக்கையாளர்கள் குஷி..!

சுருக்கம்

இந்த சிறப்பு சலுகை எதற்காக என்றால், ஏற்கனவே ரீசார்ஜ் செய்யாதவர்களுக்கு இன்கமிங் கால் வசதி  ஏற்படுத்தப்பட்டு உள்ளது போல, அவசர காலத்திற்கு மற்றவர்களுக்கு கால் செய்ய வேண்டும் அல்லவா ? இது போன்ற சமயத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..!  2 சூப்பர் சலுகையால் வாடிக்கையாளர்கள் குஷி..! 

தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய சலுகை அறிவித்து உள்ளது.

முதலாவதாக ஏர்டெல் நிறுவனம் அதன் 8 கோடிக்கும் மேற்பட்ட ப்ரீ-பெயிட் இணைப்புகளின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற ஏப்ரல் 17 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் திட்டத்தில் கால அவகாசம் முடிந்து இருந்தால் அதனை வரும் ஏப்ரல் 17, 2020 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தங்கள் ஏர்டெல் மொபைல் எண்களுக்கு வரும் இன்கம்மிங் அழைப்புகளை தொடர்ந்து பெறுவார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கூடுதல் சலுகையாக ரூ.10 மதிப்பிலான டாக் டைம் சேர்ப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த சலுகை அடுத்த 48 மணி நேரத்தில் அவரவர்களுக்கு கிடைத்துவிடும்  எனவும் தெரிவித்து உள்ளது

இந்த சிறப்பு சலுகை எதற்காக என்றால், ஏற்கனவே ரீசார்ஜ் செய்யாதவர்களுக்கு இன்கமிங் கால் வசதி  ஏற்படுத்தப்பட்டு உள்ளது போல, அவசர காலத்திற்கு மற்றவர்களுக்கு கால் செய்ய வேண்டும் அல்லவா ? இது போன்ற சமயத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒருபக்கம் இருக்க....எஸ்எம்எஸ் அனுப்பியும் பயன்படுத்திக்கொள்ளலாம் 

இந்த சலுகையானது, கட்டாயம்  தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு பெரிதும் பயன்தரும் வகையில் இருக்கும் என்கின்றனர் மக்கள். மேலும் மற்ற தோலைதொடர்பு நிறுவனங்களும் சிறப்பு சலுகை ஏதாவது அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!
Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்