இதை படிச்சிட்டு சொல்ல வேண்டியவங்களுக்கு மறக்காம சொல்லிடுங்க .......!!

 
Published : Jan 30, 2017, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
 இதை  படிச்சிட்டு  சொல்ல  வேண்டியவங்களுக்கு  மறக்காம  சொல்லிடுங்க .......!!

சுருக்கம்

நம்மில்     பெரும்பாலான  மக்கள், அவசரமாக  சிற்றுண்டியை  செய்யும் பொருட்டு  கடையில்  விற்கும் இட்லி மாவை  வாங்குவது உண்டு. அதாவது    இன்ஸ்டண்ட் இட்லி மாவு   என்றழைக்கப்படும்  இந்த மாவு,  நம்  உடலுக்கு  எந்த  அளவுக்கு  ஆபத்து   விளைவிக்கிறது  என்பதை  பார்க்கலாம் . 

கலப்படம் : 

எதிலும்   கலப்படும், எங்கும்  கலப்படும்  என  , தற்போதைய வாழ்க்கைமுறையில் அனைத்து மாறிவிட்டது.  இதன் விளைவாக  ஏற்படும்   பாதிப்புகள்  ஒன்றல்ல   இரண்டல்ல .....அதிலும்  குறிப்பாக , இட்லி  மாவு தான்  தற்போது அதிகம்  விற்பனையாகிறது.

அதுவும்    வீட்டில்  இருந்தபடியே,  பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. மேலும் சிறிய மளிகைக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி

ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை. இதன்பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் …. அதி பயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.

நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈரப்பத தோசைமாவிற்கும்) ஐ.எஸ்.ஐ. -ISI சான்று கிடையாது. எனவே, இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் பரிசோதனை செய்தபின் விற்பனைக்கு வருவதில்லை.

இந்த மாவு சில மட்டமான அரிசியும், உளுந்தும் முக்கியமாக மாவில், நாம் புண்ணுக்கு பயன்படுத்தும் போரிக் பவுடர் மற்றும் ஆரோட் மாவு, ஆகியவற்றைக் கலப்பதால் மாவில் புளிப்பு வாசனை ஒரு போதும் வராது. அதுபோக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதைச் செய்கின்றனர்.

புளிப்பு வாசம் : 

நாம் வீட்டில்  தயார் செய்யும்  மாவானது, மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும்.

கடையில் வாங்கும் மாவு : 

 கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரண்டியும் தந்து ஒரு வாசனையும் வராமல் இருக்க நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம்போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி  வைக்கப்படுகிறது.

இதன் விளைவாக  பல  பிரச்சனைகள்  வர தொடங்குகிறது. ஒரு சிலருக்கு  வாந்தி , பேதி  என  பல  உடல் உபாதைகள்  வருகிறது. சொல்லப்போனால், நம்  உடலில்  இது ஒரு  ஸ்லொ  பாய்சனாக  தான்  மாறுகிறது . 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்