
புதுச்சேரியில் 31வது மலர், காய், கனி கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் 31வது மலர், காய், கனி கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட 50,000 மலர் செடிகள், காய், கனிகள் கண்காட்சியில் உள்ளன. புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நாளை மறுநாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவ மானவிகளும் அதிகளவில் இந்த கண்காட்சியை பார்க்க வருகின்றனர்.
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பங்கேற்கவில்லை:
மேலும் கண்காட்சி அழைப்பிதழில் பெயர் இருந்தும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.