உறங்கும்போது கணவர் செய்யும் காரியம்... கடைசியில் பெண் கேட்ட கேள்வி.. 

By Kalai Selvi  |  First Published Jun 24, 2024, 8:00 PM IST

கணவரின் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் புலம்பும் பெண்ணின் குமுறல்.. அதற்கு மனநல ஆலோசகர் சொல்லும் ஆலோசனையை இங்கு காணலாம். 


கணவரின் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் புலம்பும் பெண்ணின் குமுறல்.. அதற்கு மனநல ஆலோசகர் சொல்லும் ஆலோசனையை இங்கு காணலாம். 

"எனக்கு ஒரு மாதத்திற்கு முன் தான் திருமணமானது.  வீட்டில் வரன் பார்த்து செய்த திருமணம் தான். அதனால் இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியாது. அதிலும் என் கணவர் குறட்டை விடுவதும், உறக்கத்தில் சத்தமாக பேசுவதும் நான் எதிர்பார்க்காதது. இரவில் என்னால் தூங்கமுடியவில்லை. இதை அவரிடம் சொன்னேன். என் மாமியாரிடமும் கூறினேன். ஆனால் இருவரும் கண்டு கொள்ளவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

குறட்டை இயல்பானது என்கிறார்கள். என் கணவருக்கு அதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நான் அவரிடம் மருத்துவரிடம் போவது குறித்து கேட்டேன். என் கணவர் அதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நான் வேலைக்கு செல்வதால் இரவில் சோர்வாக உணர்கிறேன். இவர் குறட்டையால் எனக்கு தூக்கமும் வரவில்லை. கிட்டத்தட்ட நான் சோம்பி மாதிரியாகிவிட்டேன். அவருக்கு எப்படி புரிய வைக்க என சொல்லுங்கள்" என்று கேட்டுள்ளார். 

இதையும் படிங்க:  "என் குழந்தைக்கு என்னோட மாமியார் தாய்ப்பால் கொடுக்குறாங்க" புலம்பும் இளம்பெண்.. நடந்தது என்ன?

மனநல ஆலோசகர் கூறிய பதில் பின்வருமாறு: இன்றைய காலகட்டத்தில் வயது வந்தவர்களில் 45% பேர் அவ்வப்போது குறட்டை விடுகிறார்கள். 25% பேர் தொடர்ச்சியாக குறட்டை விடுகிறார்கள். எல்லோருக்குமே இது ஒரு பொதுவான பிரச்சினையாக தெரிந்தாலும் உங்களுக்கு அது வெறுப்பை ஏற்படுத்துவது புரிகிறது. நீங்கள் இதைப் பழகி கொள்ளலாம் என பலர் நம்பினாலும், அது வயதாகும்போது மோசமாகிவிடும். நீங்கள் முறையாக  கவனிக்காவிட்டால், அது உங்கள் உறவுகளுக்கு இடையே பெரிய இடைவெளியும் விரக்தியையும் ஏற்படுத்தும். ஏனெனில் குறட்டை விடுபவருக்கு அது உண்டாக்கும் சத்தம் தெரியாது. அது அவர்களின் தவறல்ல.

இதையும் படிங்க:  Extra Marital Affairs : கள்ள உறவுக்கு இப்படியுமா காரணங்கள் இருக்கு..?

நல்ல உறக்கம் ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதிலும் ஏற்கனவே அதிக மன அழுத்தத்துடன் பணிபுரியும் நபர்களுக்கு தூக்கம் கட்டாயமாகும். நீங்கள் இது குறித்து மீண்டும் கணவரிடம் பேசுவது சரிதான். ஆனாலும், பொறுமையுடன் பேசுவது அவசியம். உங்களுடைய கணவரை காது, மூக்கு, தொண்டை துறையில் (ENT) நிபுணத்துவம் பெற்ற மருத்துவரை அணுக சொல்லுங்கள். தற்காலிக தீர்வுக்கு காது பிளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற பொருட்களைப் பயன்படுத்தலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!