மச்சினிச்சியை மறைந்து நின்று வீடியோ எடுத்த மாமா..! பொண்டாட்டி வர அடம் பிடித்ததால் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்..! அலேக்கா தூக்கி குமுறிய போலீஸ்..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 01, 2020, 06:13 PM ISTUpdated : Feb 01, 2020, 06:15 PM IST
மச்சினிச்சியை மறைந்து நின்று வீடியோ எடுத்த மாமா..! பொண்டாட்டி வர அடம் பிடித்ததால் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்..!  அலேக்கா தூக்கி குமுறிய போலீஸ்..!

சுருக்கம்

மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தினேஷ் திருந்தவில்லை. இதன் காரணமாகவே பலமுறை அடிதடி சண்டை என சென்று உள்ளது. இப்படி சமீபத்தில் நடைபெற்ற சண்டையின் காரணமாக கோபமாக வீட்டை விட்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் தினேஷின் மனைவி.

மச்சினிச்சியை மறைந்து நின்று வீடியோ எடுத்த மாமா..!  பொண்டாட்டி வர அடம் பிடித்ததால் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்..! அலேக்கா தூக்கி குமுறிய போலீஸ்..! 

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் தினேஷ் என்பவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தினேஷ் திருந்தவில்லை. இதன் காரணமாகவே பலமுறை அடிதடி சண்டை என சென்று உள்ளது. இப்படி சமீபத்தில் நடைபெற்ற சண்டையின் காரணமாக கோபமாக வீட்டை விட்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் தினேஷின் மனைவி. இந்தநிலையில் மீண்டும் வீட்டிற்கு வரச்சொல்லி தினேஷ் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் வர முடியாது என அழுத்தமாக தெரிவித்துள்ளார் தினேஷ் மனைவி. இதனால் கோபமடைந்த தினேஷ், மனைவியின் தங்கையை குளிக்கும்போது தெரியாமல் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோவை மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தவர்கள் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து விவரம் தெரிவிக்கவே விரைந்து வந்த மாதவரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தினேஷ் மனைவியின் தங்கை அவ்வபோது அக்கா வீட்டிற்கு வருவதும் அதுபோன்ற தருணத்தில் அவர் குளிக்க செல்லும்போது அவருக்கே தெரியாமல் மறைந்திருந்து வீடியோ எடுத்து வைத்திருந்ததும், இந்த நிலையில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் கோபமடைந்து மச்சினியின் வீடியோவை அவர் உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்"

அதுமட்டுமல்லாமல் மனைவி கிளம்பி வீட்டிற்கு வரவில்லை என்றால் சமூக வலைத்தளத்திலும் வீடியோவை பதிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.பின்னர் அனைத்து தகவலையும் பெற்றுக்கொண்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்