ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! முதல் 3 ஆண்டு கால லாபம் அப்படியே அலேக்கா எடுத்துக்கலாம் ... வரி கிடையாது...!

By ezhil mozhiFirst Published Feb 1, 2020, 5:38 PM IST
Highlights

குறிப்பாக 25 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் ஏழு ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு லாபத்தை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என இருந்தது. 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! முதல் 3 ஆண்டு கால லாபம் அப்படியே அலேக்கா எடுத்துக்கலாம் ... வரி கிடையாது...! 

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு  அதற்கு ஏராளமான சலுகைகள் வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் கேப்பிட்டல் கெயின் வரியிலிருந்து விலக்கு பெற முடியும். இதுமட்டுமல்லாமல் வருமான வரியிலிருந்து மூன்றாண்டுகளுக்கு விலக்கு பெற முடியும். மேலும் ஃபேர் மார்க்கெட் வேல்யூ வரியிலிருந்து விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பல முக்கிய சலுகைகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி வரி செலுத்த 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

குறிப்பாக 25 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் ஏழு ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு லாபத்தை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என இருந்தது. இந்த சலுகை தற்போது 100 கோடி வரை வர்த்தகம் செய்தால் அவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஏழு ஆண்டுகளில் இருந்து தற்போது 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!